2. ஒருவருக்கொருவர் ஆதரவாயிருங்கள் 1கொரிந்தியர் 7:3 புருஷன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமை யைச் செய்யக்கடவன், அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள். எபேசியர் 5:29
ஆறுதலாயிருங்கள் 1கொரிந்தியர் 7:10-11 மனைவியானவள் தன் புருஷனை விட்டு போகக் கூடாது. புருஷனும் தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது. ஆதியாகமம் 24:67
ஆருயிராயிருங்கள் 1பேதுரு 3:7 புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக் கிறபடியினால்...அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்
3. ஒருவருக்கொருவர் இன்பமாயிருங்கள் எபேசியர் 5:31 மனுஷன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள். மத்தேயு 19:5; ஆதியாகமம் 2:24
இணக்கமாயிருங்கள், ஆதியாகமம் 2:23 இவள் என் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்
இணைப்பிரியாதிருங்கள் மத்தேயு 19:6 அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால் தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் Author: Rev. M. Arul Doss .