மீகா 7:8 என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழந்தாலும் எழுந்திருப்பேன் நீதிமொழிகள் 24:16 நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கன் தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்.
1. துக்கத்தை விட்டு எழுந்திருங்கள் யோசுவா 7:10 (10-26) கர்த்தர் யோசுவாவை நோக்கி: எழுந்திரு, நீ இப்படி முகங்குப்புற விழுந்து கிடக்கிறது என்ன? எரேமியா 31:13 நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப் படுத்துவேன் யோவான் 16:20 உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.