1. கர்த்தரே இரட்சிப்பு யாத்திராகமம் 15:2; சங்கீதம் 118:14 கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; யோபு 13:16 அவரே என் இரட்சிப்பு. சங்கீதம் 3:8 இரட்சிப்பு கர்த்தருடையது. சங்கீதம் 27:1 கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். சங்கீதம் 62:2,6,7; 69:29; அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை. ஏசாயா 12:2 தேவனே என் இரட்சிப்பு, நான் பயப்படாமல் நம்பிக் கையாயிருப்பேன்... அவரே எனக்கு இரட்சிப்புமானவர். யோனா 2:9 இரட்சிப்பு கர்த்தருடையது என்றான்.
2. கர்த்தரால் இரட்சிப்பு சங்கீதம் 37:39 நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம் சங்கீதம் 62:1 தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும். எரேமியா 3:23 இஸ்ரவேலின் இரட்சிப்பு எங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் இருப்பது என்பது மெய்யே. அப்போஸ்தலர் 4:12 அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பில்லை
3. கர்த்தரிடத்தில் இரட்சிப்பு சங்கீதம் 130:7 கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு. லூக்கா 19:9 சகேயுவுக்கு கர்த்தரிடத்தில் இரட்சிப்பு கிடைத்தது சங்கீதம் 20:6 கர்த்தர் தாம் அபிஷேகம்பண்ணினவரை இரட்சிக்கிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன் சங்கீதம் 119:41 கர்த்தாவே, உம்முடைய வாக்கின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக ஏசாயா 33:2 இக்கட்டுக்காலத்தில் எங்கள் இரட்சிப்பாயிரும் புலம்பல் 3:26 கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திரு...