ஒரு அன்பின் உடன்படிக்கை

இது விசித்திரமான சூழ்நிலை. ஒரு அடிமை விடுதலைக்குப் பிறகும் செல்ல மறுக்கிறான். ஆயுள் முழுவதும் அடிமையாகவே இருக்க விரும்புகிறான். அவன் சுதந்திரம் பெற விரும்பவில்லை என்றால், சமூகம் மற்றும் மூப்பர்களின் ஒப்புதலுடன் இருக்க வேண்டும். அவனுடைய எஜமான் அவனை நீதிபதிகளின் முன்பாக கொண்டுபோக வேண்டும். அவன் இவனை கதவின் அருகேயோ அல்லது கதவு நிலையின் அருகேயோ கொண்டுபோய் ஒரு குத்தூசியினால் அவன் காதைத் துளையிடவேண்டும். அதன்பின் அவன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு அடிமையாயிருப்பான் (யாத்திராகமம் 21:1-6). இதேபோன்ற அன்பும், சேவையும் ஒரு ஆண்டவரின் சீஷனிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்பந்தம் உடன்படிக்கையாக மாறுதல்:
ஒரு அடிமை கட்டாயமாகவோ, அல்லது போர் காரணமாகவோ சேவை செய்வான். ஆனால் எஜமானனின் மனப்பான்மையும் நடப்பும்தான், அந்த அடிமையின் மனதைக் மாற்றும். இஸ்ரவேலருக்கு, அடிமையாக வருபவர்களை தயையுடன் நடத்துமாறு தேவன் கட்டளையிட்டார். அவர்கள் சேவை செய்யும் காலம் ஆறு வருடங்கள் மட்டுமே. ஏனெனில், அவர்கள் ஒருகாலத்தில் அடிமையாகவே துன்பப்பட்டார்கள், எனவே பிறரைத் துன்புறுத்தக்கூடாது (உபாகமம் 15:12-17). நியாயமான எஜமானனுக்கு, ஒரு அடிமை ஆயுள் முழுவதும் சுதந்திரமாகவே சேவை செய்ய முன்வருவான். இதனால் ஆறு ஆண்டு ஒப்பந்தம், அடிமையின் விருப்பத்தினால் ஒரு உடன்படிக்கையாக மாறுகிறது. இதேபோல, ஒரு சீஷன் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டும்.
அடிமை:
 கர்த்தர் தம்மை ஒரு அடிமையாக அல்லது ஊழியக்காரனாக ஆக்கிக்கொண்டார் (பிலிப்பியர் 2:7).‌ தேவனுடைய குமாரன், பிதாவாகிய தேவனிடத்தில் கொண்டிருந்த அன்பினால், மரணம்வரை கீழ்ப்படிந்தார். மனிதரை மீட்கும் பொருட்டு அவர் மரித்தார், அடக்கம் செய்யப்பட்டார், மீண்டும் உயிர்ந்தெழுந்தார். முதலாவது, அடிமையின் காதில் குத்தூசியினால் குத்தப்பட்டதுபோல், இரட்சகர் ஆணிகளால் குத்தப்பட்டார். இரண்டாவது, கதவுகளில் இருந்த இரத்தம் பஸ்கா நாட்களில் இருந்தது போலவே இருந்தது; பலியாட்டுக்குட்டியின் இரத்தம் வாசலும் மேல்சட்டமும் பூசப்பட்டது என்பதனை நினைவூட்டுகிறது‌ (யாத்திராகமம் 12:21-23). இரட்சகரின் கடைசி துளி இரத்தம் கூட கல்வாரி மலையில் சிந்தப்பட்டது (யோவான் 19:34). “மூன்றாவது*, அடிமைக்கு நிலையான துளையும் காயமும் இருந்தது. உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, கர்த்தர் தோமாவுக்குத் தம்முடைய வடுக்களை காண்பித்து, அவரைத் தொட்டுப் பார்க்க அழைத்தார் (யோவான் 20:24-27). பரலோகத்தில் கூட, அவர் “கொல்லப்பட்ட ஆட்டுக் குட்டியாகவே விவரிக்கப்படுகிறார் ; அதாவது, காயங்களுடன்..  (வெளிப்படுத்தல் 5:6).
அன்பின் இந்த புதிய உடன்படிக்கையை நான் புரிந்துகொள்கிறேனா?
 

Rev. Dr. J.N. Manokaran