ஒரு மிஷன் அமைப்பின் தலைவர் ஒருவர் இப்படியாக கூறினார்; ‘தொண்ணூறு சதவிகித முழுநேர பணியாளர்கள் சோம்பேறிகள் அல்லது திறமையற்றவர்கள் அல்லது சிறு வயதிலேயே ஓய்வு பெற்றவர்கள் போல கற்று வாழ விரும்பாதவர்கள்’. ஆனால் வேதாகமம், “கர்த்தருடைய வேலையை அசதியாய் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்” (எரேமியா 48:10) என்பதாக எச்சரிக்கிறது. தேவனின் பணி நித்திய தாக்கங்களைக் கொண்டுள்ளது, எனவே கவனக்குறைவாக அல்லது அசட்டையாய் செய்கிற ஞாயிறு பள்ளி ஆசிரியர்கள், இளைஞர்களை வழிநடத்தும் தலைவர்கள், ஆண்கள், பெண்கள் ஐக்கியம், வேதாகம ஆசிரியர்கள், போதகர்கள், சுவிசேஷகர்கள், ஆராதனை வீரர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் சபிக்கப்பட்டவர்கள். ஒரு தாலந்து கொடுக்கப்பட்டு, அதை அப்படியே வைத்திருந்து, இருந்ததையும் இழந்து, நிராகரிக்கப்பட்டு, தண்டிக்கப்பட்டு, நியாயந்தீர்க்கப்பட்ட மனிதனுடன் அவர்களை ஒப்பிடலாம் (மத்தேயு 25:14-30).
அறியாமை:
சிலர் அறியாதவர்களாகவும், சிலர் அறியாமையை தெரிவு செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், பிரமாணத்தை விட்டு விடுதலுக்கு மன்னிப்பு இல்லை, அது சத்தியத்தையே தவிர்ப்பதற்கு சமமாகும். ஒரு தாலந்துள்ள மனிதன் எஜமானரின் குணம் மற்றும் தரிசனம், கொடுக்கப்பட்ட திறமையின் மதிப்பு, செல்வத்தை உருவாக்கும் திறன் மற்றும் காலத்தின் அருமை ஆகியவற்றை அறியாதவனாக இருந்தான்.
வெறுமனே மற்றும் செயலற்ற காரியங்கள்:
அந்த ஒரு தாலந்து உள்ள மனிதனுக்கு அலுவலில் கண்ணும் கருத்துமாக இருக்கும் இரண்டு சகாக்கள் இருந்தனர், அவர்கள் கடினமாக உழைத்து, புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது மற்றும் புதிய யோசனைகளை ஆராய்வது என இருந்த இரண்டு தாலந்து மற்றும் ஐந்து தாலந்துள்ள மனிதர்கள் ஆவார்கள். சும்மா இருப்பது என்பது கற்றுக் கொள்ளவும் வேலை செய்யவும் இயலாமை ஆகும். அவர் சோம்பேறியாகவும், செய்ய வேண்டிய வழியில் செயல்பட விருப்பமில்லாதவராகவும் இருந்தார். ஆம், வியாபாரம் செய்வதற்குப் பதிலாக, பணத்தை புதைக்க இரவில் குழிகளைத் தோண்டினார், அது பயனற்றது அல்லவா.
உணர்வற்ற ஜீவியம்:
அவர் தனது எஜமானரின் ஆசைகள் மற்றும் விருப்பங்களுக்கு உணர்ச்சியற்றவராக இருந்தார். லவோதிக்கேயாவில் உள்ள திருச்சபையைப் போலவே, அவர் அனலும் இல்லாமல் குளிரும் இல்லாமல் இருந்தார், அது நிராகரிக்கப்படுவதற்கு மாத்திரமே தகுதியானது (வெளிப்படுத்துதல் 3:15-17).
அரைகுறை ஆயத்தம்:
ஆயத்தம் வாய்ப்பை சந்திக்கிறது. தயாராக இருப்பவர்களால் மட்டுமே வரும் வாய்ப்பை சரியாக பயன்படுத்த முடியும். இந்த மனிதர் மனரீதியாகவோ, அறிவு ரீதியாகவோ, உணர்ச்சி ரீதியாகவோ, வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் திறமையில் ஆயத்தமாக இல்லை.
திறமையற்ற நபர்:
ஒரு திறமையான நபர் தனது சொந்த தாலந்துகளையும் வரங்களையும் கண்டுபிடிப்பார். பின்னர் பயிற்சி மற்றும் அறிவை அதிகரிப்பதன் மூலம் அவற்றை வளர்த்துக் கொள்ள முடியும். அதனால் அவை திறம்பட மற்றும் பயனுள்ள வகையில் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு திறமையான மனிதன் தனது தாலந்துகள், வரங்கள், திறமைகள் மற்றும் திறன்களை அறிந்திருக்கவில்லை. எனவே, அவர் திவாலாகி விட்டார், ஆம் இருந்ததும் பறிக்கப்பட்டது.
என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை சிரத்தையோடும், அக்கறையோடும், நேர்மையோடும் செய்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran