ஏசாயா 9:6 அவர் நாமம் அதிசயமானவர்... நியாயாதிபதிகள் 13:18 அதற்குக் கர்த்தருடைய தூதனானவர்: என் நாமம் என்ன என்று நீ கேட்கவேண்டியது என்ன? அது அதிசயம் எரேமியா 32;17,27 என்னாலே (உம்மாலே) செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ (ஒன்றுமில்லை) சங்கீதம் 139:14 உமது கிரியைகள் அதிசயமானவைகள் சங்கீதம் 119:129 உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள் 1நாளாகமம் 16:13,24; சங்கீதம் 96:3 சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களை விவரித்துச் சொல்லுங்கள்.
1. அதிசயங்களைச் செய்கிறவர் யோபு 5:9; யோபு 9:10 ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் செய்கிறவர் சங்கீதம் 136:4 ஒருவராய் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 72:18 அவரே அதிசயங்களைச் செய்கிறவர் சங்கீதம் 77:14 அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே சங்கீதம் 86:10 அதிசயங்களைச் செய்கிற தேவனுமாயிருக்கிறீர். சங்கீதம் 98:1 அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார் சங்கீதம் 111:4 அதிசயமான செய்கைகளை நினைவுகூர செய்தார் ஏசாயா 25:1 கர்த்தாவே, நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்.
2. அதிசயங்களைக் காண்பிக்கிறவர் மீகா 7:15 நீங்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்தது போலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன். யோவேல் 2:30; அப்போஸ்தலர் 2:19 வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன். லூக்கா 5:26 (17-26) அதிசயமான காரியங்களை இன்று கண்டோம்...
3. அதிசயமாய் நடத்துகிறவர் யோவேல் 2:26 நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை. Author: Rev. M. Arul Doss