பொருட்களை டெலிவரி செய்யும் ஒரு பெரியவர் ஒருவேளை மழைநீர் சேற்றில் விழுந்திருக்கலாம். ஏனெனில் அவர் கையிலிருந்த பார்சல் ஈரமாகவும், சேதமடைந்ததாகவும், கறைகளுடன் அசிங்கமாகவும் இருந்தது. இருந்தபோதிலும், வாங்கிக் கொண்ட அந்த நபர் அந்த பெட்டியை எடுத்து, அதை அவிழ்த்து, அவர் விரும்பிய வைர மோதிரத்துடன் தனது நண்பரிடமிருந்து வந்த ஒரு பரிசுக் குறிப்பையும் கண்டார். அப்படி ஆச்சரியவிதமாக வந்தவைகள் முக்கியமானவை, மதிப்புமிக்கவை மற்றும் குறிப்பிடத்தக்கது, பொதிந்து கொண்டு வந்ததோ மற்றும் அதை கொண்டு வந்த நபர அல்லது அதன் தயாரிப்பு அல்லது பரிசின் தன்மை என அந்த பரிசு பிரதிபலிக்கவில்லை, ஆம், உள்ளே இருக்கும் பொருள்தான் முக்கியம்.
முகவர்:
முகவர் என்பது தூதுவர், கூரியர் வழங்குபவர் அல்லது அஞ்சல் நபர். அவர் உள்ளே வைத்திருந்த பொருளை உருவாக்கியவரோ அல்லது உரிமையாளரோ அல்ல. தன்னிடம் ஒப்படைத்ததை கொண்டு போய் சேர்ப்பதே அவர் கடமை. அவ்வாறே, தேவன் தம் மக்களைத் தம்முடைய தூதர்களாக அனுப்புகிறார். எல்லா கிறிஸ்தவர்களும் அவர்கள் எங்கிருந்தாலும் சாட்சிகளாக இருக்க அழைக்கப்படுகிறார்கள் (அப்போஸ்தலர் 1:8). அவர்கள் ஏழைகளாகவோ பணக்காரராகவோ; படித்தவராகவோ அல்லது படிக்காதவராகவோ; ஆரோக்கியமானவராகவோ அல்லது நோய்வாய்ப்பட்டவராகவோ; முதலாளியாகவோ அல்லது பணியாளராகவோ; ஆண்களாக அல்லது பெண்களாக; குழந்தைகளாக அல்லது வயதானவர்களாக; சொற்பொழிவாளராகவோ அல்லது திக்குவாயாகவோ என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். துரதிர்ஷ்டவசமாக, சிலர் செய்தி அல்லது தயாரிப்புக்கு பதிலாக தூதருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எனவே, பரிசைத் தவறவிடுகிறார்கள்.
மூட்டை:
உயிர்த்தெழுந்த ஆண்டவர் தம் சீஷர்கள், திருச்சபை என அவரை ஏற்றுக் கொண்ட அனைவரையும் உலகம் முழுவதும் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ளுமாறு கட்டளையிட்டார். திருச்சபையால் உலகின் பல பகுதிகளுக்கும் நற்செய்தி எடுத்துச் செல்லப்படுகிறது. சில திருச்சபைகள் நல்லவிதமானதாக இருக்கிறது, சில திருச்சபைகளில் உள்நாட்டு குழப்பங்கள் உள்ளன. சிலர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நேசிக்கிறார்கள் ஆனால் சபையை வெறுக்கிறார்கள் அல்லது புறக்கணிக்கிறார்கள். திருச்சபை ஊடுருவுபவர்கள், கட்டுப்படுத்துபவர்கள், சீர்குலைப்பவர்கள், செல்வத்தை சேகரிப்பவர்கள், அதிகார வெறியர்கள் போன்றவற்றால் விமர்சிக்கப்படுகிறது. பரிசு பொதிந்து வைக்கப்பட்டிருந்த டப்பா அல்லது மூட்டை காரணமாக, ஒரு பரிசு அல்லது தயாரிப்பு நிராகரிக்கப்பட்டால், அது பெறுபவருக்கு தான் பெரும் இழப்பு.
பொருள்:
சேதமடைந்த மூட்டையின் உள்ளே விவரிக்க முடியாத பரிசு இருந்தது, இது ஒரு அழுக்கான அல்லது கறையுள்ள நபரால் வழங்கப்பட்டது. பரிசை விசுவாசத்துடனும் நன்றியுடனும் பெறுபவர்கள் நித்திய ஜீவனை அனுபவிக்கிறார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒரு விவரிக்க முடியாத அல்லது விலையேறப்பெற்ற பரிசு (2 கொரிந்தியர் 9:15). கடந்த கால பாவங்களுக்கு மன்னிப்பு, தற்போதைய பாவ சோதனைகளை வெல்லும் வல்லமை மற்றும் தேவ சமூகத்தில் பாதுகாப்பான எதிர்காலம், பாவம் நுழைய முடியாத பரலோகம் என இரட்சிப்பின் விவரிக்க முடியாத பரிசு ஏராளம் ஏராளம்.
இந்த கிறிஸ்மஸை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் விவரிக்க முடியாத பரிசு எனக் கொண்டாடி மகிழ்வோமா?
Rev. Dr. J.N. Manokaran