ஒரு நபர் நள்ளிரவில் ஒரு புதிய நகரத்திற்கு வந்தான். ரயில் நிலையம் மிக அமைதியாக இருந்தது. பலர் தளங்களில் மற்றும் நாற்காலிகளில் தூங்கிக்கொண்டிருந்தனர். பயணத்தால் சோர்ந்திருந்ததும், பாதுகாப்பாக இல்லை என்ற உணர்வும் அவனை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அப்போது போலீசார் ஒரு சிறிய காவல் சாவடியில் உட்கார்ந்திருப்பதும், அங்கே காலியிடமும் இருப்பதும் அவனுக்குப் பதற்றத்துக்குள் ஒரு சிறு நம்பிக்கையைத் தூண்டியது. அந்த இடத்தை அடைந்து, அதைச் சுத்தம் செய்து அமர்ந்தான். உடனே அங்கிருந்த போலீசார் கூச்சலிட்டுக் கிளம்பச் சொன்னார். ஏன் எனக் கேட்டபோது, அவர் கடுமையாக; "இங்கே உன்னைப் போல் வெளிநகரத்து ஆட்களுக்கு ஏதாவது நடந்து விடலாம். அப்படி ஏதாவது நடந்தால் அது என் கண் முன்னால் நடக்கக்கூடாது. நான் பொறுப்பேற்க வேண்டிய நிலை வரும். தூரமாக போ" என்றார். அந்த மனிதர் பயத்தில் தளர்ந்து விட்டார். போலீசாரால் விரட்டப்பட்ட அவர், அந்த இரவு முழுவதும் பயந்த நிலையிலேயே கழித்தார். ஆனால், அவருக்கு எதுவும் நடக்கவில்லை.
அசதி:
அப்பாவி மக்களை பாதுகாக்க நியமிக்கப்பட்ட மனிதர், தான் செய்ய வேண்டிய கடமையைச் செய்யவில்லை. தளர்வு என்பது மிக அபாயகரமான ஒன்று. தீர்க்கதரிசி எரேமியா, ஆண்டவரின் செயல்களில் தளர்ந்துக் காணப்படுவோரைச் சபிக்கப்பட்டவர்கள் எனக் கண்டிப்பாக எச்சரிக்கிறார். “கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்” (எரேமியா 48:10). ஒரு பொறுப்பை ஏற்றுக்கொண்டு அதனை நிறைவேற்றாமல் இருப்பது, தேவசெயல்களில் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும்.
கடமையுணர்வு:
அந்த போலீஸ் அதிகாரிக்கு கடமையுணர்வு இல்லை. ஒருவருக்கு ஒரு பொறுப்பு அளிக்கப்படும் போது, அதனுடன் சேர்ந்து வரும் கடமையையும் அவர் நிறைவேற்ற வேண்டியது அவசியம். பலர் அந்தப் பொறுப்பின் சலுகைகளை மற்றும் நலன்களை மட்டும் விரும்பி அனுபவிக்கிறார்கள்; ஆனால் அதன் முக்கியமான கடமையை புறக்கணிக்கிறார்கள்.
சமாரிய மாதிரி:
நல்ல மற்றும் உயர்ந்த சமாரியன், சாலையில் உயிரிழப்பதற்குள்ளாக இருந்த மனிதரை பார்த்ததும், தாமதிக்காமல் உதவிக்கு விரைந்தார். அந்த உயிரிழப்பு நிலைமைக்குள்ளானவர் யாரென்று தெரியாவிட்டாலும், அவர்கள் வேறு கலாச்சாரம், மொழி அல்லது மதத்தையச் சேர்ந்தவராக இருந்திருக்கலாம் (லூக்கா 10:25–37), ஆனாலும் அவருக்கு மனித உயிரின் மீது மதிப்பு இருந்தது. இந்த மனித உயிருக்கான மதிப்பும் கரிசனையும் போலீஸ் அதிகாரியின் இடத்தில் காணப்படவில்லை. சமாரியன் செயலில் இறங்கிச் செயல் மூலம் உயிரிழக்கும் மனிதனுக்கு வாழ்வை அளித்தார்; ஆனால் போலீசார், பாதுகாப்பு தேடி வந்த ஒருவனை உதவாமல் துரத்தி, ஆபத்தில் விட்டுவிட்டார்.
பொறுப்புள்ள நிர்வாகம்:
அப்போஸ்தலனாகிய யாக்கோபு எச்சரிக்கிறார், யாரேனும் நன்மை செய்யக் கூடிய அறிவும், ஆதாரங்களும், அதிகாரமும் பெற்றிருக்கும்போது அதைச் செய்யத் தவறினால், அது தேவனுக்கு எதிரான பாவமாகிறது (யாக்கோபு 4:17).இந்த ஆணைமுறையை மீறிய போலீஸ் அதிகாரி, அவரை பொறுப்புடன் நியமித்த அரசுக்கும், பாதுகாப்புக்காக நம்பிய பொதுமக்களுக்கும் துரோகம் செய்தார்.
நான் செய்யும் எல்லாவற்றிலும், அசதியாய் இல்லாமல் சிரத்தையுடன் இருக்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran