தேவனின் மகிமை அறிவித்தல்

மக்கள், சூரியோதயத்தின் மகத்துவத்தைக் காண கன்னியாகுமரி மற்றும் கஞ்சன்ஜங்கா போன்ற மலை உச்சிகளுக்குச் செல்கின்றனர். அந்தமான் என்னும் இடத்தில் சூரிய அஸ்தமனத்தின் அழகைக் காணலாம். தாவீது, வானங்களைப் பார்த்து ஆச்சரியமடைந்து ஒரு அழகான சங்கீதம் எழுதியிருக்கிறார் (சங்கீதம் 19:1-6). மூன்று வானங்கள் உள்ளன; வளிமண்டலம் (நம்மைச் சுற்றியுள்ள மண்டல வானம்), வெளிவிண்வெளி, மேலும் கடைசியாக தேவன் வாசம் செய்யும் பரலோக வானம். தாவீது, பகலில் காணப்படும் நீலவானத்தையும், இரவில் காணப்படும் நட்சத்திரங்களால் நிரம்பிய வானத்தையும் குறிக்கிறார். இவை அனைத்தும் தேவனுடைய மகிமையை அறிவிக்கின்றன.

சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களிலும் தேவ மகிமை: 
ஒவ்வொரு மனிதனும் சூரியோதயம் அல்லது சூரியஅஸ்தமனம் குறித்து மெய்மறந்து கவரப்படுகிறான். இரவில் மேகங்களுக்கு மத்தியில் மிதக்கும் சந்திரன், அனைத்து தலைமுறை கவிஞர்களையும் கவிபாட ஊக்கப்படுத்தியது. மின்னும் நட்சத்திரங்களின் விண்மீன் திரள்கள், விஞ்ஞானிகளால் புரிந்து கொள்ள முடியாதவையாகவும், கவிஞர்கள் முழுமையாக விவரிக்க முடியாதவையாகவும், மனித கண்களுக்கு வசீகர அழகாகவும் உள்ளன.

அளவில் கூட தேவ மகிமை: 
சூரியன், சந்திரன், மற்றும் நட்சத்திரங்களின் அளவை தொழில்நுட்பத்தின் உதவியுடன் அளக்க முடியும். இருந்தாலும், அவை மனிதர்கள் முழுமையாக புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு மிகப் பெரியவை.

பொறியியலில் தேவ மகிமை: 
கிரகங்கள், செயற்கைகோள்கள், நட்சத்திரங்கள் மற்றும் விண்கற்களின் பாதைகள் அசாதாரணமானவை. அவை எப்படி தங்களின் ஒவ்வொன்றான வட்டப்பாதையில் சுயமாக நிலைத்து, ஒன்றோடொன்று ஒத்துழைத்து, இடையிலான ஒற்றுமையுடன், விண்வெளியில் ஒழுங்காக இயங்குகின்றன என்பது விசித்திரமானதும், இணக்கமான தாளம் போன்றதாகும்.

கலையில் தேவ மகிமை:
எல்லா சிருஷ்டியும் மிகுந்த அழகும் நிறவண்மையும் கொண்டது, துல்லியமான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது தேவனுடைய கலைப்பணி.

நன்மையான தேவ மகிமை: 
இவை அனைத்தையும் தேவன் ஒரு நோக்கத்திற்காகவே, அதாவது மனிதர்களுக்காக ஒரு அழகான, நிலைத்த, ஆரோக்கியமான இல்லமாக உருவாக்கினார்.

தொடர்புகளில் தேவ மகிமை: 
வானம் பேச்சைத் தருகிறது; அறிவை வெளிப்படுத்துகிறது. பகலும் இரவும் மனிதர்களோடு பேசுகின்றன. எபிரேய வார்த்தையின் ஆழமான அர்த்தம்: வெளிப்பாடுகளின் புதுமையான நீர் ஊற்றைப் போல ஓடுகிறது. நிலாவும் நட்சத்திரங்களும் இல்லாமல் இரவு முழுவதும் இருள் மட்டுமே இருந்திருந்தால், மனிதர்கள் புலனற்ற நிஜமற்ற தன்மையையே நம்பி இருப்பார்கள். ஆனால் அந்த வானம் நம்பிக்கையையும், கர்த்தரைப் பற்றிய ஒரு நம்பிக்கையையும் அளிக்கிறது. ஒரு மனிதன் பூமிக்கடியில் வைக்கப்பட்டு அல்லது பார்வையற்றவராக இருந்தால் அல்லது வானத்தைப் பார்க்க முடியாமல் இருந்து திடீரென வானத்தை காண்பித்தால் அல்லது பார்வை திறந்தால், அவர் தேவனுடைய மகிமையை அறிவிப்பார். உலகத்தில் உள்ள எல்லா பிரசிங்கிப்பவர்களும் மௌனமாகி விட்டாலும்கூட, விழுந்துபோன மனிதகுலத்திற்கு தேவனுடைய மகிமைகளை தெரிவிப்பதை நிறுத்தாது. இது யாராலும் புரிந்துகொள்ளக்கூடியதாகவே உள்ளது. அப்போஸ்தலனாகிய பவுல் தேவனுடைய நித்திய குணாதிசயங்கள் வெளிப்படையாக காணப்படுகின்றன; எனவே மனிதருக்கு உண்மையான கடவுளை விசுவாசிப்பதற்கு எந்த சாக்குபோக்கும் இல்லை (ரோமர் 1:20) என நினைவூட்டுகிறார்.

நான் தேவனின் மகிமையைக் கேட்கிறேனா, பார்க்கிறேனா மற்றும் அனுபவிக்கிறேனா? அல்லது அறியாதவன் போல் இருக்கிறேனா?
 

Rev. Dr. J.N. Manokaran