யோவான் 19:30 இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி தலையை சாய்த்து ஆவியை ஒப்புக்கொடுத்தார்
1. பிதாவின் சித்தத்தை முடித்தார் யோவான் 4:34 நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது. யோவான் 17:4 பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்.
2. பிசாசை ஜெயித்து முடித்தார் ரோமர் 16:20 சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார் 1யோவான் 3:8 பிசாசின் கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார் யோவான் 16:33 உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.
உங்களுக்கும் முடிவு உண்டு நீதிமொழிகள் 23:18 நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது சங்கீதம் 138:8; 57:2 கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார். ஏசாயா 60:20 உன் துக்கநாட்கள் முடிந்துபோம். சங்கீதம் 37:37 உத்தமனுடைய முடிவு சமாதானம் யோபு 8:7 ஆரம்பம் அற்பமாயிருந்தாலும் முடிவு சம்பூரணமாயிருக்கும். Author: Rev. M. Arul Doss