ஒரு பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்டதற்குப் பிறகு தன் மருத்துவரான கணவனுக்கு எழுதியிருந்த வார்த்தைகள்: “அவர் என்னை அல்ல, என் வேலையையே திருமணம் செய்தார்” (இந்தியன் எக்ஸ்பிரஸ், 20 மார்ச் 2025). இது மிகுந்த வருத்தம் அளிக்கக் கூடியதாகும். உலகம் முழுவதும் பேராசை மற்றும் பொறாமை நிரம்பியுள்ளது என்பதைக் காண முடிகிறது. இது பத்துக் கட்டளைகளுக்கு எதிரானது. தேவன் கொடுத்த பத்துக் கட்டளைகளில், பேராசை மற்றும் கொலை ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. ஒருவரை தற்கொலை செய்யத் தூண்டும் செயலும் இதில் அடங்கும் (யாத்திராகமம் 20:1-17).
வரதட்சணை:
கலாச்சார உலகக் கண்ணோட்டம் என்னவென்றால், கணவன் ஒரு தெய்வமாக கருதப்படுகிறார்; ஆனால் மனைவி பெண் தெய்வம் அல்ல, அடிமை மட்டுமே. எனவே, ஒரு அடிமை பெண்மணி எப்போதும் தன் கணவனாகிய தெய்வத்தை மகிழ்விக்க வேண்டிய கட்டாயத்துடன் இருக்கிறாள். இது, அவளுடைய கணவனுக்கான முதல் தட்சிணை மூலம் துவங்குகிறது. அவளுடைய பெற்றோர் ரூ. 26 லட்சம் வரதட்சணையாக வழங்கினார்கள். ஆனால் கணவன் குடும்பம் அதில் திருப்தியடையாமல், ஒரு காரும் வேண்டினர்; அதுவும் தரப்பட்டது. அந்தக் குடும்பம் அவளுடைய வேலையை மிகவும் விரும்பியது, ஏனெனில் அது தவணை முறையில் கிடைக்கிற வரதட்சணையைப் போலவே நல்ல வருமானத்தை கொடுத்தது.
சுயமரியாதை இல்லை , வேலை செய்யும் பணிப்பெண் மட்டுமே:
துஷ்பிரயோகம் செய்யப்பட்டும், விரக்தியடைந்தும் இருந்த அந்த ஆசிரியர், “ஒரு மனைவியாக எனக்கு மரியாதை கொடுக்கப்படவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார். தேவன் ஆதாமுக்காக ஏவாளை உருவாக்கியபோது, அவள் ஒரு துணையாகவும், உதவியாளராகவும் இருந்தாள். ஆனால் இன்றைய கணவர்கள், அழகான, சம்பாதிக்கின்ற, கடுமையாக உழைக்கும் ஒரு வேலைக்காரியையே விரும்புகிறார்கள்; நல் துணையையோ அல்லது மனைவியையோ அல்ல.
அவள் பள்ளியில் வேலை பார்த்து வந்ததும், வீட்டில் மகன், கணவன் மற்றும் மாமியார்களையும் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாக இருந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் அவளிடம் கோரிக்கைகளை வைத்திருந்தனர்.
கொடுப்பதில்லை, பெறுவது மட்டுமே:
அவளுடைய குடும்ப வாழ்வில், கணவனும் அவரது குடும்பத்தினரும் கொடுப்பதில் அக்கறையில்லாமல், எப்போதும் பெறுவதில் தான் குறிக்கோளோடு இருந்தார்கள். பரஸ்பர ஒத்துழைப்பு என்ற உணர்வே இல்லை.
அவர்கள் கவனத்தையும் பராமரிப்பையும் எதிர்பார்த்தார்கள், ஆனால் பரிதாபமான இந்த பெண்ணைப் பற்றி அக்கறையை இல்லை; அலட்சியம் மாத்திரமே இருந்தது.
சந்தோஷப்படுத்த முடியாது:
எல்லோரையும் மகிழ்விக்க முயன்று, அவள் உணர்வுப்பூர்வமாக உடைந்து போனாள், உடலுறுத்தலால் சோர்ந்துபோனாள், மனதளவில் பதற்றத்தில் ஆழ்ந்திருந்தாள். இதனால், கடைசியில் தற்கொலை செய்வதையே தேர்ந்தெடுத்தாள்.
துரதிருஷ்டவசமாக, தற்கொலை என்பது ஒரு தீர்வே அல்ல என்பதை அவள் அறியவில்லை. தன்னைப் பாதுகாத்து உரிமைக்காக குரல் கொடுத்து, தீமையைக் எதிர்த்துப் போராடுவதற்குப் பதிலாக, அவள், தீமைக்கு பலியாகிவிட்டாள்.
முன்னுரிமை:
ஒரு கணவனுக்கு மனைவி தான் முதன்மையானதும் முக்கியமானதும் ஆவாள். அதுவே திருமணத்திற்கான பிரமாணமும் உடன்படிக்கையும் ஆகும்.
வேதாகமம், “கணவர்கள் தங்களுடைய மனைவியை நேசிக்க வேண்டும்” என்று கட்டளையிடுகிறது. ஆனால் வரதட்சனை, கார், மாத வருமானம், தாயார், தந்தை, சகோதரர்கள் ஆகியோர் முதலில் இருந்து, மனைவி என கடைசி நிலையில் இருக்கும் போது, அங்கே ஒரு பேரழிவு உண்டாகும்.
எனது குடும்ப வாழ்க்கை வேதாகமத்திற்கு உட்பட்டதா?
Rev. Dr. J.N. Manokaran