ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து
இடைவிடாமல் போதித்து கொண்டிருக்கிறார். இந்த மாற்கு 4 ல் விதைக்கிறவனுடைய உவமை மற்றும் இன்னும் பல உவமைகளால் பேசுகிறார்.. அங்கு கூடியிருந்த மக்களுக்குப் புரியும் விதமாக ஆண்டவர் எளிமையாக தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டே இருக்கிறார் .பிறகு அக்கரைக்கு போவோம் .. வாருங்கள் என்று சொல்லி சீஷர்களிடத்தில் கேட்கிறார். அவர்கள் ஆண்டவரை படகில் வைத்தபடி கடலுக்குள்ளே போகிறார்கள். ஆண்டவர் விடாமல் பிரசங்கித்தினாலே , சுற்றி ஆட்கள் கூட்டமாக சூழ்ந்திருந்ததினாலே களைப்படைந்தவராக படகின் பிண்ணனியத்திலே சென்று தலையணை வைத்து தூங்க ஆரம்பிக்கிறார். திடீரென்று பலத்த சுழல் காற்று உண்டாகி,படகு நிரம்பத்தகதாக அலைகள் அதின் மேல் மோதியடித்தது. சீஷர்கள் பயந்து அலறிக்கொண்டு, உயிர் பயத்தோடு இயேசு கிறிஸ்துவைப் போய் எழுப்ப ஆரம்பிக்கிறார்கள் .போதகரே நாங்கள் மடிவதைப் பார்த்து உமக்கு கவலையில்லையா? என்று கேட்கிறார்கள். பயத்திலே அவர்களுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. இயேசுவும் எழும்பி இந்த சூழ்நிலையை புரிந்து கொள்கிறார். இவர்கள் எதைப் பார்த்து பயந்திருக்கிறார்கள்.. எது இவர்களை இப்படி பேச வைத்தது என்பதைப் பார்த்துவிட்டு..உடனே 'காற்றை அதட்டி'.. கடலைப் பார்த்து 'இரையாதே !அமைதலாயிரு' என்று சொல்கிறார். அப்பொழுது காற்று நின்று போய்,, கடலும் அமைதியானது. அதுவரை அடித்த சூறாவளி, ஆண்டவர் அதட்டியதும் நின்றது .அதுவரை அலைக்கழித்து ஆர்ப்பாட்டமாய் இருந்த கடல் அமைதலானது .
ஆண்டவர் அவர்களைப்(சீஷர்களை) பார்த்து ஏன் இப்படி பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமல் போனது ?என்று கேட்கிறார் .
பிரியமானவர்களே இந்தக் குறிப்பிட்ட சம்பவத்திலிருந்து நாம் கற்றுக் கொள்கிற காரியங்கள் என்னவ�