மத்தேயு 1:23; ஏசாயா 7:14-16 இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.
1. நம் கூடவே இருக்கிறார் மத்தேயு 28:20 உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களோடிருக்கிறேன் ஏசாயா 41:10; 43:5 பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன் யோசுவா 1:9 நீ போகும் இடமெல்லாம் உன்னோடே இருக்கிறேன் சங்கீதம் 91:11 உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படிக்கு... எரேமியா 1:8;அப்போஸ்தலர் 18:10 காக்கும்படிக்கு உன்னோடே இருக்கிறேன்; ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை. எரேமியா 1:19 இரட்சிக்கும்படிக்கு உன்னோடே இருக்கிறேன்.
2. நம் நடுவே இருக்கிறார் மத்தேயு 18:20 இரண்டு பேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவில் இருக்கிறேன். செப்பனியா 3:15,17 கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக் களை விலக்கினார்; அவர் உன் நடுவில் இருக்கிறார்; இனி தீங்கைக் காணாதிருப்பாய்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார். யோசுவா 3:10 ஜீவனுள்ள தேவன் உங்கள் நடுவே இருக்கிறார் யோவேல் 2:27 நான் உங்கள் நடுவில் இருக்கிறவர்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.
3. நம் உள்ளே இருக்கிறார் 1யோவான் 4:4 உலகத்தில் இருக்கிறவனிலும் உங்களில் இருக்கிறவர் பெரியவர் உபாகமம் 7:21 நீங்கள் பயப்படாதிருங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன் யோவான் 14:17அவர் தேற்றரவாளனாக உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள் Author: Rev. M. Arul Doss