மும்பையிலிருந்து மான்செஸ்டருக்குச் சென்ற விமானம் இயந்திரத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக குவைத்தில் அவசரமாக தரையிறங்க வேண்டியிருந்தது. பயணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர்; அதாவது ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து உரிமை பெற்ற பாஸ்போர்ட்களை வைத்திருப்பவர்கள், விசா இல்லாமல் குவைத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டவர்கள், மற்றும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்தவர்கள், விசா தேவைப்பட்டு உள்ளே நுழைய முடியாதவர்கள். உரிமை பெற்ற பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் தங்குமிடம் மற்றும் உணவைப் பெற்றனர், மற்றவர்கள் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டியிருந்தது (NDTV, டிசம்பர் 2, 2024).
இரண்டு குழுக்கள்:
பயணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டதைப் போலவே, மனிதகுலம் இறுதியில் தேவனுக்கு முன்பாக இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
ஒன்று, அவரது மகிமையான பிரசன்னத்தில் நுழைய உரிமை உள்ளவர்கள்.
மற்றொன்று, பரிசுத்த தேவனுடன் வசிக்க உரிமை இல்லாதவர்கள்.
உலகம் தேவனுக்கு முன்பாக சாதி, வர்க்கம், கோத்திரம், இனம், தேசியம் மற்றும் மதம் என பல பிரிவுகளை அங்கீகரித்தாலும், ஒரே ஒரு வேறுபாடு மட்டுமே முக்கியமானது; அதாவது ஒரு நபர் மீட்கப்பட்டாரா இல்லையா என்பதேயாகும்.
இரண்டு வழிகள்:
தேவன் மனிதகுலத்திற்கு முன் இரண்டு பாதைகளை வைத்திருக்கிறார்; ஜீவ வழி மற்றும் மரண வழி (உபாகமம் 30:19). குறுக்கு சாலைகளோ அல்லது மாற்று வழிகளோ இல்லை.
“பரலோகத்திற்குச் செல்லும் குறுகிய வாசலுக்குள் நுழையுங்கள். நரகத்திற்குச் செல்லும் பாதையோ எளிமையானது. ஏனெனில் நரகத்தின் வாசல் அகன்றது. பலர் அதில் நுழைகிறார்கள். ஆனால், மெய்யான வாழ்விற்கான வாசல் மிகவும் குறுகியது. மெய்யான வாழ்விற்குக் கொண்டு செல்லும் பாதையோ கடினமானது. மிகச் சிலரே அப்பாதையைக் கண்டடைகிறார்கள்" (மத்தேயு 7:13-14).
இரண்டு தெரிவுகள்:
தேவன் நமக்கு சுதந்திரமான விருப்பத்தை அளித்துள்ளார், ஆனால் தெரிவு தெளிவாக உள்ளது:
இரட்சகரும் ஆண்டவருமான தேவனுடைய குமாரனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
உலகின் பல பொய்யான மற்றும் அர்த்தமற்ற அல்லது ஜீவனற்ற பாதைகளைப் பின்பற்ற வேண்டும்.
"தேவனுடைய குமாரனுக்கு நீங்கள் உண்மையானவர்கள் என்பதைக் காட்டுங்கள், நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால் ஆண்டவர் உங்களை அழிக்க தன் கோபத்தைக் காட்டத் தயாராக இருக்கிறார். கர்த்தரை நம்பும் ஜனங்கள் சந்தோஷமாயிருப்பார்கள். ஆனால் மற்ற ஜனங்கள் கவனமாக இருக்கவேண்டும். கர்த்தர் தமது கோபத்தை வெளிப்படுத்தத் தயாராக இருக்கிறார்” (சங்கீதம் 2:12).
இரண்டு இலக்குகள்:
பலர் தாங்கள் சரியான பாதையில் இருப்பதாக நினைக்கிறார்கள், ஆனால் அது அழிவுக்கு வழிவகுக்கிறது (நீதிமொழிகள் 14:12). ஜீவ புத்தகத்தில் பெயர்கள் காணப்படாத கிறிஸ்துவை நிராகரிப்பவர்கள், அக்கினிக் கடலில் தள்ளப்படுவார்கள், அழுகை மற்றும் பற்கடிப்புடன் நித்திய வேதனையுடன் இரண்டாம் மரணத்தை அனுபவிப்பார்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் நீங்கள் சுத்திகரிக்கப்படுகிறீர்களா?
Rev. Dr. J.N. Manokaran