கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தின் வெற்றியின் ரகசியம் பிதாவுடனான அவரது நெருக்கமான தொடர்பு என்பதை சீஷர்கள் கண்டுபிடித்தனர். எனவே, அவர்கள் தங்களுக்கும் ஜெபிக்கக் கற்றுக்கொடுக்கும்படி ஆண்டவரிடம் வேண்டினர். நல்ல கர்த்தர் அவர்களுக்கு ஜெபிக்கக் கற்றுக் கொடுத்தார், அதுமாத்திரமல்ல, எப்படி ஜெபிக்கக்கூடாது என்பதைக் குறித்தும் அவர்களுக்கு நினைவூட்டினார், மேலும் தாழ்மையாக ஜெபிப்பது எப்படி என்பதை ஒரு உவமை மூலமாக கற்றுக் கொடுத்தார் (லூக்கா 11:1-13; 18:10-14; மத்தேயு 6:1-13).
என்னைக் கவர:
பரிசேயர்கள் தன்னை நல்லவர்களாகக் கண்டார்கள். அதை வெளிப்படுத்த ஜெபம் ஒரு நல்ல காரணியாக தெரிந்தது! அவர்கள் பொது இடங்களில் ஜெபிக்க விரும்பினார்கள், ஏனென்றால் அதில் ஒரு திருப்தியைக் கண்டார்கள். மேலும் தன்னை மிரட்டி பணம் பறிப்பவர்கள், அநீதி செய்பவர்கள் மற்றும் விபச்சாரம் செய்பவர்கள் மற்றும் ஜெபிக்க வந்தவர்களுடன் தங்களை ஒப்பிட்டுப் பார்த்தார்கள்.
மற்றவர்களைக் கவர:
பரிசேயர் போன்ற மாயக்காரர்கள் ஜெப ஆலயங்களிலும் தெரு மூலைகளிலும் மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ஜெபிக்கிறார்கள். தங்கள் ஜெபத்திற்குக் கேட்போர் கடவுள் அல்ல, ஆனால் அவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள்தான். தேவனைப் பொறுத்தவரை, அவர்கள் அதற்குரிய பலனை அடைந்து விட்டார்கள்; அதாவது பக்தியுள்ளவர்களாகவும், ஜெபத்தைக் கடைப்பிடிப்பவர்களாகவும், தூய்மையானவர்களாகவும் அறியப்படுகிறார்கள் (மத்தேயு 6:5).
கர்த்தரைக் கவர:
பரிசேயர்கள் கர்த்தரைக் கவர முயன்றனர். முதலில், அவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை உபவாசம் இருந்தார்கள். அது உணவு கட்டுப்பாடு திட்டமாக அல்ல, ஆனால் தேவன் தனது ஜெபங்களுக்கு செவிசாய்க்கும்படி அல்லது பதிலளிக்கும்படி ஒரு அச்சுறுத்தல் திட்டம். இரண்டாவதாக, அவர்கள் தங்களுக்குக் கிடைத்த எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தார்கள், அவர்களுடைய சமையலறைத் தோட்டத்தின் விளைச்சலைக் கூட கொடுத்தார்கள். துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் சத்தியம், இரக்கம் மற்றும் நீதியை புறக்கணித்தனர் (மத்தேயு 23:23). மூன்றாவதாக, அவர்கள் தங்கள் வெற்று சொற்றொடர்கள் அல்லது வார்த்தைகளை மீண்டும் மீண்டும் கூறுவதன் மூலம் தேவனைக் கவர முயன்றனர். தங்கள் வார்த்தைகளாலும், பாடல்களாலும், இசைகளாலும் தேவன் ஈர்க்கப்படுவார் என்று அவர்கள் தவறாகப் புரிந்துக் கொண்டார்கள் (மத்தேயு 6:5).
உண்மையான ஜெபம்:
தேவனுடைய குடும்பத்தின் உறுப்பினராக பிதாவை நோக்கி ஜெபம் செய்யப்பட வேண்டும் என்று கர்த்தர் கற்பித்தார். தேவன் பரிசுத்தர், ஆகையால் பரிசுத்தத்தோடு அவரை தொழுது கொள்ள வேண்டும். தொழுது கொள்கிறவர்களின் முன்னுரிமை தேவனுடைய ராஜ்யமாக இருக்க வேண்டும். ஒரு சீஷனின் உயர்ந்த நோக்கம் தேவனுடைய சித்தத்தைச் செய்வதாகும். ஒரு சீஷன் உடல், பொருள், ஆவி, உணர்வு, மனம், சமூகம், பொருளாதாரம் மற்றும் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு தினசரி வாழ்வாதாரத்தைப் பெறுவதற்கு மனத்தாழ்மையுடன் இருக்க வேண்டும். மற்றவர்களை மன்னிப்பதன் மூலம், ஒரு சீஷன் சிலுவையில் மரித்த குமாரனால் கிடைக்கப்பெற்ற மன்னிப்பு என்ற பரிசுக்கு தனது நன்றியைத் தெரிவிக்கிறான். ஒரு தாக்குதலுக்கு ஆளாகக்கூடிய அல்லது எளிதில் இலக்காகும் நிலைமையில் உள்ள சீஷர் கர்த்தரிடமிருந்து விடுதலையை நம்பியிருக்கிறார்.
ஜெபம் எனக்கு ஒரு வெற்றிகரமான கிறிஸ்தவராக மாற உதவியதா?
Rev. Dr. J.N. Manokaran