பலனளிக்கும் கத்தரித்தல்

ஒரு மனிதன் ஒரு அழகான திராட்சைத் தோட்டத்தை வைத்திருந்தார்.  அவசர வேலையாக வேறு ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தது. தான் ஊரில் இல்லாத நாட்களில் திராட்சைத் தோட்டத்திற்கு ஒவ்வொரு நாளும் சரியான நேரத்தில் தண்ணீர் பாய்ச்சுமாறு அவர் தனது வேலைக்காரர்களுக்கு அறிவுறுத்தினார்.   ஆயினும்கூட, வேலையாட்கள், திராட்சைத் தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சவில்லை.   சோம்பேறித்தனமாக இருந்தனர், வெறுமனே பொழுதைக் கழித்தனர்.  எஜமானன் திரும்ப வேண்டிய நாள் வந்தது; செடிகள் மெதுவாக காய்ந்து வருவதைக் கண்டார்கள்.  பயத்தில், அவர்கள் திராட்சைத் தோட்டம் முழுவதும் தண்ணீர் ஊற்றினார்கள்.  அதிக நீரை பாய்ச்சுவதன் மூலம் எஜமானனின் கண்டிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்று நினைத்தனர்.  எஜமானன் வந்தபோது வயல் ஈரமாக இருந்தது, செடிகள் காய்ந்து கொண்டிருந்தன.  உடனே ஒவ்வொரு செடியையும் உன்னிப்பாக கத்தரிக்க ஆரம்பித்தார்.  இரண்டு நாட்களில், திராட்சைத் தோட்டம் பழையபடி உயிர்பெற்றது.   கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் திராட்சைக் கொடியில் நிலைத்திருக்க சீஷர்கள் அழைக்கப்படுகிறார்கள்.   பிதாவாகிய தேவன் திராட்சைத் தோட்டக்காரர்.  மிகுதியான மற்றும் நிலைத்திருக்கும் கனிகளைக் கொடுப்பதற்காக அவர் கத்தரிக்கிறார்; சுத்தம் பண்ணுகிறார் (யோவான் 15:1-2).

கனி:  
கிறிஸ்தவ வாழ்க்கை ஒரு பயனுள்ள வாழ்க்கை.  இரவும் பகலும் தேவனுடைய வார்த்தையை தியானிக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட மனிதன் அந்தந்த பருவத்தில் பலனைத் தருகிறான் (சங்கீதம் 1:1-3).‌ ஒரு மரம் மற்றவர்களின் நன்மைக்காக பலனைத் தருகிறது, அதுபோல தான் ஒரு விசுவாசியும் இருக்க வேண்டும்.   பேதுரு சீஷர்களை திறமையுள்ளவர்களாகவும் மற்றும் பலனளிக்கும்படியும் இருக்குமாறு அழைக்கிறார் (2 பேதுரு 1:8). மனந்திரும்புதலின் கனி, ஆவியின் கனி, உதடுகளின் கனி, ஆத்துமாவை ஆதாயப்படுத்தும் கனி எனப் போன்றவை ஆற்றல்மிக்க கிறிஸ்தவ வாழ்க்கைக்கு சான்றாகும் (மத்தேயு 3:8; கலாத்தியர் 5:22-23; எபிரேயர் 13:15-16). 

கத்தரித்தல்: 
குறைந்த கனியைத் தரும் தாவரங்கள், உகந்த மற்றும் ஏராளமான பலன்களைக் கொடுக்க கத்தரிக்கப்படுகின்றன. வெறுமையான தண்டுகள் மற்றும் இலைகள் ஒரு கொடிக்கு ஒரு சுமை.  அவை வேர்கள் மற்றும் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் ஆற்றலை உறிஞ்சுகின்றன. கத்தரிக்கும்போது  வீணான எடையை அகற்ற உதவுகிறது.   வெட்டுவது என்பது திராட்சைத் தோட்டக்காரரால் எடுக்கப்பட்ட கடினமான முடிவு மற்றும் வேதனையானது.  இருப்பினும், ஏராளமான கனியைப் பெற இது ஒன்றே ஒரே வழி.  கிறிஸ்தவ வாழ்க்கையில், பூமியிலிருந்து தப்பித்து பரலோகத்தில் நுழைந்து விட வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோள் அல்ல, ஆனால் உலகில் பலனைக் கொடுத்து ஆசீர்வாதமாக இருக்க வேண்டும்.   முதிர்ச்சியடையாத ஆவிக்குரிய சீஷர்கள் பக்குவமடைய சீரமைப்பு செயல்முறையை மேற்கொள்வார்கள்.   கத்தரித்தல் மூலம் நித்தியத்தில் பலன் அளிக்கப்படும் நிலையான கனியைக் கொடுக்க உதவுகிறது. 

 பூமிக்குரிய வாழ்வில் அதிகளவில் பலனளிக்க என்னை நான் கத்தரித்தலுக்கு ஒப்புக் கொடுக்கிறேனா? 

Rev. Dr. J.N. Manokaran