கேலண்டைன்ஸ் தினம்

முக்கியமான நாட்களாக சில தினங்கள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றன. அதாவது தந்தையர் தினம், அன்னையர் தினம், நன்றி தெரிவிக்கும் நாள், ஆசிரியர் தினம் இப்படி போன்றவையாக இருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு நாள் தான் கேலண்டைன்ஸ் தினம். அது ஒரு கிளர்ச்சியாளர்கள் கொண்டாட்டம் எனச் சொல்லலாம். தாங்கள் செய்ய விரும்புவதைச் சரியாகச் செய்வதும், அதைச் செய்ய தங்களை அனுமதித்த நண்பர்களைப் பெற்றதற்கு நன்றி செலுத்துவதும் இதன் நோக்கம். இன்னும் திருமணமாகாத பெண்கள், ஆண் நண்பர்கள் இல்லாதவர்கள், தங்களுக்குள் கொண்டாடத் தொடங்கினர். இது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13 ஆம் தேதி, காதலர் தினத்திற்கு ஒரு நாள் முன்பு கொண்டாடப்படுகிறது. கேலண்டைன்ஸ் தின நிகழ்வுகள் பொதுவாக பரஸ்பர "அதிகாரமளிப்பு... பெண்கள் ஒருவரையொருவர் ஆதரித்து மேம்படுத்துவதற்கான நினைவூட்டல்" கொண்ட அனைத்து பெண்களும் பங்கேற்கும் நிகழ்வுகளாகும். இது பெண்களின் நட்பு, பரஸ்பர ஆதரவு, அதிகாரமளித்தல் மற்றும் ஒருவரையொருவர் உயர்த்த முயற்சிப்பதைக் கொண்டாடுகிறது. நட்பு, ஐக்கியம், ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துதல், சேவை செய்தல் மற்றும் ஊக்குவித்தல் அனைத்தும் நல்ல விஷயங்கள் தான். பெண்களுக்கு இடையேயான அத்தகைய அற்புதமான ஐக்கியத்தைப் பற்றி வேதாகமம் மிக அழகாகக் கற்பிக்கிறது. அவர்கள் ஒரு வலிமையான குழுவை உருவாக்கி, கர்த்தருக்காக பெரிய காரியங்களைச் செய்தார்கள்.   

நகோமி மற்றும் ரூத்: 
நகோமியும் ரூத்தும் நட்பு, ஐக்கியம் மற்றும் ஒருவருக்கொருவரான பரஸ்பர அர்ப்பணிப்புக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ரூத் தனது கணவரும் நகோமியின் மகனுமான மக்லோனை, இழந்த சோகம் இருந்தபோதிலும், அவர்களின் நட்பு அப்படியே இருந்தது (ரூத் 1:2-5). அவர்கள் இரண்டு வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள்: இஸ்ரவேலர்கள் மற்றும் மோவாபியர்கள். அவர்களுக்குள் இருபது வயது வித்தியாசம் இருக்கலாம், ஆனாலும் அவர்களின் உறவு தலைமுறைகளைக் கடந்து இருந்தது. அவர்கள் மேசியாவின் மூதாதையர்கள்.

மரியாள் மற்றும் எலிசபெத்: 
கன்னி மரியாள், தான் மேசியாவின் தாயாகப் போவதாக பிரதான தூதரான கேப்ரியலிடமிருந்து செய்தியைப் பெற்றபோது. அவள் திகைத்து, அதிர்ச்சியடைந்தாள், ஆனால் தேவ சித்தத்திற்கு கீழ்ப்படிந்தாள். அவளுக்கு ஆவிக்குரிய பலம், ஜெபம் மற்றும் ஊக்கம் தேவைப்பட்டது. அதற்கு எலிசபெத் தான் அவளுடைய சரியான தெரிவு, அவள் ஆவிக்குரிய ரீதியாக பக்குவமுள்ளவள், ஒரு உறவினர், அவளுடைய பாட்டியைப் போலவே வயதானவள். அவள் எலிசபெத் வீட்டிற்குப் பயணம் செய்து, ஒரு சிறந்த ஐக்கிய நேரத்தைக் கொண்டாள் (லூக்கா 1:39-45). அனைத்து தீர்க்கதரிசிகளிலும் மிகப் பெரியவரான யோவான் ஸ்நானகரையும், தேவக் குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் கொடுத்த பெரிய தாய்மார்கள்.

 மரியாள் மற்றும் மார்த்தாள்:
அநேகமாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு இருப்பதற்கு உடன்பிறந்த அவர்களுக்குள்ளே ஒரு போட்டி இருந்தது. அவர்கள் இருவரும் கர்த்தரை நேசித்தார்கள், ஒருவர் அவருடைய பாதத்தில் அமர்ந்து அவருடைய வார்த்தைகளைக் கேட்பதன் மூலம் சேவை செய்தார், மற்றவர் கர்த்தருக்குத் தேவையான உணவு மற்றும் பிற பொருட்களைத் தயாரிப்பதில் மும்முரமாக இருந்தார் (லூக்கா 10:38-42).

கர்த்தருடைய சீஷர்கள்:
மகதலேனா மரியாள், யோவன்னா, சூசன்னா ஆகியோர் கர்த்தருடன் ஐக்கியத்தை அனுபவித்து அவரைப் பின்பற்றிய சீஷர்கள் ஆவர்.  அவர்கள் தங்கள் வளங்களைக் கொண்டு அவருடைய தேவைகளையும் பூர்த்தி செய்தனர் (லூக்கா 8:1-3)

சக சீஷர்களுடன் எனக்கு நோக்கமான ஐக்கியங்கள் உள்ளதா அல்லது வெறுமனே பொழுதுபோக்குகளா? 
 

Rev. Dr. J.N. Manokaran