2. வழிகளைக் காண்கிறார் நீதிமொழிகள் 5:21மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப் பார்க்கிறார். யோபு 31:4 அவர் வழிகளைப் பார்த்து, என் நடைகளை எண்ணுகிறார் ஏசாயா 57:18 அவர்கள் வழிகளை நான் பார்த்து, குணமாக்குவேன்.
3. நடைகளைக் காண்கிறார் யோபு 34:21 அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார். நீதிமொழிகள் 16:9 மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; நடைகளை உறுதிபடுத்துகிறவரோ கர்த்தர். நீதிமொழிகள் 20:24 கர்த்தராலே மனுஷருடைய நடைகள் வாய்க்கும்; ஆகையால் மனுஷன் தன் வழியை அறிந்துகொள்வதெப்படி?