மத்தேயு 16:24 இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். மாற்கு 8:34; லூக்கா 9:23 1. தீமையை வெறுத்துவிடுங்கள் சங்கீதம் 97:10 கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடு... ரோமர் 12:9 உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக, தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள். ஆமோஸ் 5:15 தீமையை வெறுத்து, நன்மையை விரும்பி... 2. வீண் சிந்தனைகளை வெறுத்துவிடுங்கள் சங்கீதம் 119:113 வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன் 3. வீண் மாயைகளை வெறுத்துவிடுங்கள் சங்கீதம் 31:6 வீண் மாயைகளைப் பற்றிக்கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து, கர்த்தரையே நம்பியிருக்கிறேன். 4. தீயோரின் வழிகளை வெறுத்துவிடுங்கள் நீதிமொழிகள் 4:14-15 துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே. அதை வெறுத்துவிடு, 5. அந்தரங்க காரியங்களை வெறுத்துவிடுங்கள் 2கொரிந்தியர் 4:2 வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம். 6. லௌகிக இச்சைகளை வெறுத்துவிடுங்கள் தீத்து 2:12 நாம் அவபக்தியையும் லௌகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி, 7. கறைப்பட்ட வஸ்திரங்களை வெறுத்துவிடுங்கள் யூதா 1:23-24(20-25) மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்திரத்தையும் வெறுத்துத்தள்ளுங்கள். வழுவாதபடி உங்களைக் காக்கவும் தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே... மாசற்றவர்களாய் நிறுத்தவும்...
Author: Rev. M. Arul Doss