முன்னிலைப்படுத்தப்பட்ட வசனம்

சுரிந்தர் கவுர் ஒரு பக்தியுள்ள சீக்கிய குடும்பத்தில் பிறந்தவர்.   புத்திசாலித்தனமான குழந்தையாக இருந்ததால், அவள் உயர்வடைந்து, மூத்த சகோதரியுடன் சேர்ந்து படித்தாள்.   பள்ளியில் படிக்கும் போது இயேசு கிறிஸ்துவை பல கடவுள்களில் ஒருவராக புரிந்து கொண்டாள்.   தனது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து, சீக்கிய கோவில் வழிபாட்டில் கலந்து கொண்டு, லாங்கர் என்ற கூட்டு உணவில் மகிழ்ச்சியுடன் பங்கேற்றார். 

நற்செய்திக் கேட்டல்: 
அவளது தந்தைக்கு வேலையில் இடமாற்றம் செய்யப்பட்டதால், அவரது குடும்பம் ஒரு புதிய நகரத்திற்கு குடிபெயர்ந்தது, அந்த ​​புதிய சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவது அவளுக்கு கடினமாக இருந்தது.   அவள் இதைக்குறித்து இப்படியாக எழுதுகிறாள்; “இந்த எனது போராட்டத்தில், நான் என் குழந்தைப் பருவத்தில் வழிபட்ட எல்லா கடவுள்களையும் நோக்கி கூப்பிட்டேன்.  நான் அடிக்கடி குளியலறை சென்றேன், அங்கு நான் தனிமையில் குருநானக், அல்லா, ராமர், இயேசு மற்றும் சாய்பாபாபா என எல்லாரிடமும் கண்ணீருடன் வேண்டினேன், உதவிக்காக மன்றாடினேன்”.  பின்னர்  தற்கொலை செய்து கொள்ள நினைத்ததாகவும், அவளுடைய போராட்டத்தைப் பார்த்து அவளுடைய தந்தை அவளோடு உடன்பிறந்த சகோதரிகளையும் உறைவிடப் பள்ளியில் சேர்த்தார்.   அங்கு படிக்கும் சீனியர் அனிதா நற்செய்தியைப் பகிர்ந்து கொண்டாள், அதை சுரிந்தர் எதிர்த்தாள். ஆனால், அவளுடைய மூத்த சகோதரியோ கர்த்தராகிய ஆண்டவரை ஏற்றுக்கொண்டாள்.

கிறிஸ்துவைப் பின்பற்றுபவள்: 
தோல்வி பயம் அவளை அனிதாவிடம் அணுக வைத்தது, இயேசு தனக்கு தேர்வில் உதவ முடியுமா என்று கேட்கிறாள்.  அனிதாவும் ஆம், பரீட்சைகளில் கள்ளத்தனமாக நடந்துகொள்ளாவிட்டால், இயேசு நிச்சயமாக உதவுவார் என்றாள். பின்பதாக சுரீந்தர் நாற்பது நாட்கள் பள்ளிப் பாடங்களுடன் வேதாகமத்தையும் படிக்கத் தொடங்கினாள். இதைக் குறித்து சுரிந்தர் கவுர் எழுதுகிறாள்; “அந்தப் மகிமையான வசனமான யோவான் 14:6க்கு என் கண்கள் ஈர்க்கப்பட்டன, “அதில் இயேசு பதிலளித்தார், ‘நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்.  என் மூலமாகத் தான் யாரும் பிதாவினிடத்தில் போக முடியும்”. அன்று முதல், அவள் தனக்காக கிடைக்கப்பெற்ற ஒரு வசனமாக அதை எண்ணிக் கொண்டாள்.  சுரீந்தர் தேர்வில் தேர்ச்சி பெற்றதோடு மட்டுமல்லாமல் கல்லூரியில் மூன்றாம் இடத்தையும் பிடித்தாள். ஒரு சர்வவல்லமையுள்ள தேவனை சுயலாபங்களுக்காகப் பயன்படுத்திய குற்ற உணர்வை அவள் அன்று உணர்ந்தாள்.   பின்னர் அவள் ஒப்புக்கொண்டாள்; "நான் சுயநல லட்சியத்தால் உம்மைப் பின்தொடரத் தொடங்கினேன், ஆனால் இன்று நான் உங்களுக்குச் சொல்கிறேன், நான் தேர்ச்சி பெற்றாலும் அல்லது தோல்வியடைந்தாலும், நான் உம்மைப் பின்பற்றுவேன்."

ஜீவப் புத்தகம்:  
 "சுரிந்தர், என்பது பாலின வேறுபாட்டை அறிந்துகொள்ள முடியாத ஒரு சீக்கிய பெயர் என்று அழைக்கப்படுவதால் நான் எப்போதும் சங்கடப்பட்டேன்"  என்று எழுதுகிறார். ஆனால் அவளுடைய பெயர் ஜீவ புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கர்த்தர் கூறுகிறார் (வெளிப்படுத்துதல் 3:5).

Rev. Dr. J.N. Manokaran