தேவன் சாத்தியமற்ற மற்றும் ஒழுங்கற்ற மக்களை நீதியின் கருவிகளாக மாற்றத் தேர்ந்தெடுக்கிறார் (ரோமர் 6:13). டக் நிக்கோல்ஸின் கதை மே 2024 இல் டிசிஷன் பத்திரிகையில் வெளியிடப்பட்டது.
வீணான டீனேஜரா?
“நான் என் பள்ளி ஆண்டுகளை சண்டையிட்டு, குடித்து, சூதாடி வீணடித்தேன், நான் ஒரு முழு புத்தகத்தையும் கூட ஒழுங்காக படித்ததில்லை. பள்ளியில் என்னை சீக்கிரமாக அனுப்பி விட்டனர், பின்னர் எனக்கு டிப்ளோமா கொடுத்தார்கள்” என்பதாக டக் நிக்கோல்ஸ் கூறுகிறார்.
காபி நேரம்:
அதிகாலை 1 மணிக்கு குடிபோதையில் வீட்டிற்கு வந்தேன். கிறிஸ்தவர் ஒருவர் என்னைப் பார்த்து, அந்த நேரத்தில் காபி குடிக்க அழைத்தார். மூன்று மணி நேரம், அவர் தொடர்ந்து காபி ஊற்றிக் கொண்டு நற்செய்தியைப் பகிர்ந்து கொண்டார். அதிகாலை 4 மணிக்கு, டக் நிதானமாக இருந்தார், காபியால் நிரம்பியிருந்தார், நற்செய்தியைப் புரிந்துகொண்டார், முழங்காலில் நின்றார், கர்த்தரை தனது இரட்சகராக ஏற்றுக் கொண்டார்.
வேதாகம சவால்:
டக் வேதாகமத்தைப் படிக்கத் தொடங்கினார், ஆனால் அவரது மோசமான வாசிப்புத் திறன் காரணமாக அதைப் புரிந்துகொள்வது அவருக்கு கடினமாக இருந்தது. ஒரு நண்பர் பரிந்துரைத்தபடி, நான் ஒரு வேதாகமப் பள்ளிக்குச் சென்றேன். முதல் செமஸ்டரில், அவர் அனைத்து பாடங்களிலும் தோல்வியடைந்தார். வீட்டிற்குச் செல்ல பொருட்களையெல்லாம் எடுத்து தயார் நிலையில் இருக்கும் போது, அந்த நேரத்தில் ஒரு மூத்த ஓய்வுபெற்ற மிஷனரி அங்கு வந்தார், டக் தன் வேதாகம பள்ளியை முடிக்கும் வரை அவருக்குப் பயிற்சி அளித்தார். அங்கு அவர் சீனாவிற்கு மிஷனரிகளின் மகள் மார்கரெட்டைச் சந்தித்தார், அவர்கள் 1968 இல் திருமணம் செய்து கொண்டனர்.
அருட்பணிகள்:
அவர்கள் தகுதியற்றவர்கள் என்பதால் பன்னிரண்டு அமைப்புகள் அவர்களை மிஷனரிகளாக மாற நிராகரித்தன. ஆபரேஷன் மொபிலைசேஷன் (OM) அவர்களை ஏற்றுக்கொண்டு இந்தியாவுக்கு அனுப்பியது.
காசநோய் சுகாதாரம்:
டக் நோய்வாய்ப்பட்டு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டு அரசாங்கத்தால் நடத்தப்படும் காசநோய் சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உள்ளூர் மொழி பேசத் தெரியாது, ஆனால் சக நோயாளிகளுக்கு துண்டுப்பிரசுரங்களை வழங்கினார். ஒரு நாள் இரவு 2 மணிக்கு அவர் எழுந்திருக்கும்போது படுக்கையில் இருந்து எழுந்திருக்க சிரமப்படும் ஒருவரைக் கண்டார். டக் அவரை பாத்ரூம்க்கு அழைத்துச் சென்று மீண்டும் அழைத்து வந்தார். இந்த கருணை செயல் பரவியது, நோயாளிகள் துண்டுப்பிரசுரங்களைப் பெற வரத் தொடங்கினர். அவர்களில் பலர் கர்த்தரை ஏற்றுக்கொண்டனர்.
கிறிஸ்தவ வளர்ச்சி ஊழியங்கள்:
பின்னர் அவர்கள் பிலிப்பைன்ஸில் 21 ஆண்டுகள் பணியாற்றினர். தென் கரோலினாவை தளமாகக் கொண்ட இவர், தற்போது பிலிப்பைன்ஸில் 200,000 தெருக் குழந்தைகளைப் பராமரிக்கிறார், மேலும் அங்குள்ள 51,000 பயிற்சி பெறாத போதகர்களில் சிலருக்கு பயிற்சி அளிக்கிறார். அவர்கள் கொஞ்சத்தில் உண்மையுள்ளவர்களாக இருந்தனர்; தேவன் அவர்களை அநேகத்தில் அற்புதமான பொறுப்பைக் கொடுத்தார்.
அந்நியர்களுக்கு கருணையுடன் சேவைச் செய்ய நான் தயாராக இருக்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran