இந்தியாவின் சில இடங்களில், மக்கள் அடையாளத்தைப் பதிவுசெய்யும் தரவெடுப்பு நடைபெற்றது. அப்போது கிறிஸ்தவர்கள் குழப்பத்தில் விழுந்தனர். சிலர் தங்கள் அடையாளமாக ஜாதியை குறிப்பிட விரும்பினர். இந்திய சமூகத்தின் படிநிலை அமைப்பு; இந்து மதத்தின் தாக்கத்தில் உருவானது. பிறப்பை அடிப்படையாகக் கொண்டு ஜாதி அடையாளத்தை நிர்ணயிக்கிறது.
சில கிறிஸ்தவர்கள், ஜாதி அடையாளத்தை அளித்தால் அரசு வழங்கும் நலத்திட்ட சலுகைகள் கிடைக்கும் என நினைத்தனர்.
மற்றொருபுறம், சிலர் தாங்கள் கிறிஸ்தவர்கள் கார்த்தரான இயேசுகிறிஸ்துவின் அடிச்சுவடுகள் என்பதே தங்கள் அடையாளம் என்று உணர்ந்தனர். ஒரு தேவ மனுஷன் எலியா கூறியதுபோல் கூறினார்;
“ஜாதியே தேவன் என்றால் அதையேத் தேர்வு செய்யுங்கள்;
கிறிஸ்துவே கர்த்தரும் இரட்சகரும் என்றால் அவரையேத் தேர்வு செய்யுங்கள்” (1 இராஜாக்கள் 18:21). ஆம், ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் பயணம் செய்ய முடியாது.
இயேசுவே கர்த்தர்:
ரோமப் பேரரசின் காலத்தில், கிறிஸ்தவர்கள் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டனர். ரோமப் பிரஜையாக இருக்க, ஒவ்வொரு ஆண்டும் அருகிலுள்ள ஆலயத்துக்கு சென்று; “சீசரே கர்த்தர்” என்று சத்தியம் செய்ய வேண்டியது அவசியம். அதை மறுத்தால், அவர்களின் குடியுரிமை ரத்துச் செய்யப்பட்டது. ஆனால் ஆரம்பக்கால கிறிஸ்தவர்கள் துணிவுடன் அறிவித்தார்கள்; “இயேசுவே கர்த்தர்”. இதனால் அவர்கள் தேசிய விரோதிகள் என்று கருதப்பட்டார்கள்; கைது செய்யப்பட்டார்கள்; கொடுமைப் படுத்தப்பட்டார்கள்; மரண தண்டனையும் வழங்கப்பட்டது. ஆனாலும் ரோமப் பேரரசு அழிந்தது
ஆனால் திருச்சபை இன்று வரை நிலைக்கிறது. கர்த்தர் சொன்னதுபோல்; “பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளாது” (மத்தேயு 16:18). எந்த இராஜ்ஜியத்தின் கொடுங்கோன்மையும், அரசின் அநியாய சக்தியும், திருச்சபையை அழிக்க முடியாது மற்றும் வெல்ல முடியாது.
அடையாளம்:
“கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் எல்லாரும் ஜீவனுள்ள தேவனின் பிள்ளைகளாக ஆவார்கள்” (யோவான் 1:12) என வேதாகமம் அறிவிக்கிறது. முதலில், இந்த அடையாளம் நித்தியமானது.
இவ்வுலக அடையாளங்களான ஜாதி, இனம், குலம், கோத்திரம் மரணத்துடன் முடிவடைகின்றன.
ஆனால் தேவபிள்ளைகள் தேவதூதர்போல் மேன்மையான அடையாளம் பெறுகிறார்கள். இரண்டாவது; கிறிஸ்துவுடைய சீஷர்கள் பரலோகத்தின் குடிமக்கள் (பிலிப்பியர் 3:20). பூமியின் நாடுகள் குடியுரிமை வழங்கவும், களைவதற்கும் முடியும். ஆனால் பரலோக குடியுரிமையை அவை நல்கவும் முடியாது; களையவும் முடியாது. மூன்றாவது; இந்த பூமியில் அவர்களின் பங்கு என்ன? அவர்கள் இந்த பூமியில் கிறிஸ்துவின் தூதர்கள் (2 கொரிந்தியர் 5:20). அவர்கள் பூமியின் உப்பு, உலகத்தின் ஒளி, ராஜ்ய முன்னுரிமையுடன் வாழ்கிறார்கள், நீதியின் மதிப்புகள் முறையைப் பின்பற்றுகிறார்கள், மேலும் ஒரு மலையின் மீதுள்ள ஒரு நகரம் போல இருக்கிறார்கள்.
இயேசு என் கர்த்தரா (தெய்வமா)?
Rev. Dr. J.N. Manokaran