குழந்தையிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்

முதியவர் ஒருவர் தனது பயணத்தின் போது அவரின் விமானத்திற்காக காத்திருந்தார். அங்கு வசதி படைத்த ஒருவர் அமர்ந்திருந்தார், அவர் புளூடூத்தை பயன்படுத்தியபடி, சிற்றுண்டி சாப்பிட்டவாறு, காபி குடித்துக் கொண்டும் இருந்தார். அவர் செல்ல வேண்டிய விமானத்திற்கான அறிவிப்பு வந்ததும், அவர் அப்படியே குப்பைகளையெல்லாம் விட்டுவிட்டு, தனது பையை எடுத்துக்கொண்டு வாசலை நோக்கியவாறு செல்ல முயன்றதும் முதியவர் அவரைத் தடுத்து, நீங்கள் போட்டக் குப்பைகளை எடுத்தால், நின்று கொண்டிருந்தவர்கள் உட்கார வசதியாக இருக்குமே எனக் கூறினார்.  அதற்கு அவர்; “ஏன் விமான நிலையத்தில் உதவியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் எதற்காக நியமிக்கப்படுகிறார்கள்? அவர்கள் அதை சுத்தம் செய்யட்டும்"  என்றார். இதற்கிடையில், சுமார் பத்து வயதுடைய ஒரு சிறுவன் ஓடி வந்து, குப்பைத் தொட்டியின் லேபிளைக் குனிந்து படித்து விட்டு, சரியானபடி குப்பையை அதற்குள் போட்டுச் சென்றான். உடனே இந்த முதியவர், “அருமை!  அருமை! மகனே, நல்ல காரியம் செய்தாய். உன் பெற்றோர் உன்னை நன்றாக வளர்த்துள்ளார்கள்” என்பதாக பாராட்டினார்.   இதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த மனிதர் தன் இருக்கைக்குத் திரும்பிச் சென்று குப்பைகளை சுத்தம் செய்து விட்டு சென்றார். உண்மையில் அறிவுரையும் கண்டனமும் நிராகரிக்கப்பட்டன, ஆனால் சிறுவனின் ஒழுக்கமான செயல் அவரை அவமானப்படுத்தியது மற்றும் அவரது தவறுகளை உணர்த்தி திருத்தியது. 

குழந்தை ஒரு ஆசிரியர்: 
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒரு சிறுபிள்ளையை நிறுத்திச் சொன்னார்; “நான் உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன். நீங்கள் மனந்திரும்பி உள்ளத்தில் சிறு பிள்ளைகளைப் போல ஆக வேண்டும். அவ்வாறு மாறாவிட்டால், நீங்கள் ஒருபொழுதும் பரலோக இராஜ்யத்தில் நுழைய முடியாது. இந்த சிறு பிள்ளையைப்போல பணிவுள்ளவனாகிறவனே பரலோக இராஜ்யத்தில் பெரியவன்” (மத்தேயு 18:3-4).

தன்னிச்சையான ஒழுக்கம்: 
கர்த்தர் அந்தச் சிறுபிள்ளையை அழைத்தபோது, அக்குழந்தை தன்னிச்சையாக வந்தது.   ஏன் என்று புரியவில்லை என்றாலும், குழந்தைகள் கேட்கவும் கீழ்ப்படியவும் தயாராக இருக்கிறார்கள்.   பாரம்பரியத்தின் படி, அச்சிறுபிள்ளை அந்தியோக்கியாவின் இக்னேஷியஸ் ஆவார், அவர் கி.பி 107 இல் இரத்த  சாட்சியாக மரித்த ஒரு சிறந்த எழுத்தாளர். 

பொறுப்பற்றத்தனமும் பெருமையும்: 
அந்த மனிதன் படித்தவராகவும் பணக்காரராகவும் இருந்தபோதிலும், பொறுப்பற்றவராகவும் பெருமையுள்ளவராகவும் இருந்தார்.   தனக்கு விருப்பமான இடத்தில் குப்பைகளை வீசுவதற்கு தனக்கு உரிமை இருப்பது போல் எண்ணினார், அதை வேறு யாராவது சுத்தம் செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்த்தார்.

சாதி/வர்க்க மனநிலை: 
அந்தப் பெரியவர் சமூக படிநிலை மனப்போக்கைக் கொண்டிருந்தார்.   சுற்றுப்புறத்தை மாசுபடுத்துவது தனது உரிமை மற்றும் பாக்கியம் என்றும், அதைச் சுத்தம் செய்வது வேறொருவரின் கடமை என்றும் அவர் நினைத்தார்.  கொடுமை என்னவென்றால், சுத்தம் செய்பவர்கள் கீழ் ஜாதி அல்லது கீழ்வகுப்பு என்று அழைக்கப்படுகிறார்கள். 

நல்ல பெற்றோர்: 
 சிறுவனின் பெற்றோர் அவனை ஒழுக்கத்துடன் வளர்த்தனர்.

குழந்தையைப் போல நான் ஒழுக்கமுள்ள,  பணிவுள்ள சிரத்தையுள்ள நபராகவும் இருக்கிறேனா?

Rev. Dr. J.N. Manokaran