லெந்து தியானம்- நாள் 21

Mr. அறிவின்மை (நியா. 15-16)

தேவ பிடியில் vs தெலீலாள் மடியில்
தேவ பிடியில் இருக்க வேண்டிய சிம்சோன் தெலீலாள் மடியில் கிடந்தான்!

கர்த்தருக்கு கொடுக்க வேண்டிய இடத்தை ஒரு அந்நிய பெண்ணிடம் கொடுத்து தன்மேலிருந்த அபிஷேகத்தை இழந்தான்.

இவன் தன் அறிவின்மையால் கர்த்தர் தன்னை விட்டு விலகினதை அறியாமல் இருந்தான்.

தேவன் விரும்பாத இடத்தில் நாம் இருக்க கூடாது:

•   தாவீது - மாடியில்...
•   சிம்சோன் - தெலீலாள் மடியில்... 
•   யோனா - கப்பல் அடியில்...

நொடியில் நாம் பாவத்தில் விழுந்துவிடுவோம்... ஆகவே தேவ பணியில் அவரின் பிடியில் இருப்பது நல்லது! ஞானம் பெற்றவர்களாய் நடந்து…

இந்த விருந்தாளியை நம்மை விட்டு விலக்கிடுவோம்!

Author: Bro. Dani Prakash