வாழ்நாள் முழுவதும் கற்றல்

நவீன உலகில், வாழ்நாள் முழுவதும் கற்றல் என்பது ஒரு பிரபலமான சொல், ஒரு போக்கு மற்றும் ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. தொழில்நுட்பம் வேகமாக மாறுகிறது, மேலும் புதிய தொழில்நுட்பங்களைக் கையாள திறமைகள் தேவைப்படுகின்றன. எனவே, ஒரு நபர் தன் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால் வாழ்நாள் முழுவதும் கற்றல் என்பது ஒரு சீஷனுக்கு ஓர் அழைப்பு மற்றும் அர்ப்பணிப்பாகும். உன்னதமான, புனிதமான, நேர்மையான மற்றும் நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்வது தினசரி பழக்கமாக இருக்க வேண்டும்.

வார்த்தை:
ஒருவர் தினந்தோறும் வேதாகமத்தைக் கற்று, தியானம் செய்ய வேண்டும் (அப்போஸ்தலர் 17:11). தேவனுடைய வார்த்தையை இரவும் பகலும் எப்போதும் தியானிக்க வேண்டும் (சங்கீதம் 1:1-3). இது ஒரு விசுவாசியின் தினசரி ஒழுக்கம் மற்றும் பழக்கமாகும்.

பரிசுத்த ஆவி:
பரிசுத்த ஆவியானவர் ஒரு ஆறுதலளிப்பவர் மற்றும் ஆசிரியர் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்குக் கற்பித்தார். கர்த்தர் அவர்களுக்குக் கற்பித்ததை பரிசுத்த ஆவி நினைவுபடுத்துவார்  (யோவான் 14:25-26). சீஷர்கள் வேதாகமத்தைப் படித்து, அதை தங்கள் இருதயங்களில் சேமித்து வைக்கும்போது, தேவைப்படும் போதெல்லாம் அதை மீட்டெடுக்க பரிசுத்த ஆவி அவர்களின் மனங்களுக்கு உதவுகிறது. சங்கீதக்காரன் எழுதுகிறான்; “கர்த்தாவே, ஜீவஊற்று உம்மிடமிருந்து புறப்படுகிறது. உமது வெளிச்சம் நாங்கள் ஒளியைக் காண உதவுகிறது” (சங்கீதம் 36:9). தேவனுடைய ஆவி வேதத்தைப் புரிந்துகொள்ள ஞானத்தைத் தருகிறது.

சூழல்:
தேவன், சீஷர்களை பல்வேறு சூழ்நிலைகளில் வைக்கிறார். சில சூழ்நிலைகள் நலமுடன், மனமகிழ்வுடன் இருக்கலாம்; மற்றவை கடினமானவையாக இருக்கலாம். ஆனாலும், அத்தகைய சூழ்நிலைகளில் தேவன் ஒருவரைத் தம்முடைய பயனுள்ள பாத்திரமாக மாற்றி வடிவமைக்கிறார். யோசேப்பு, எகிப்து பேரரசில் ஊழியம் செய்வதற்காக, தேவனுடைய அதிகாரமுள்ள திட்டத்தின்படி, போத்திபாரின் வீட்டிலும் சிறையிலும் பயிற்சியடைந்தான்.

பிறரிடமிருந்து கற்றுக்கொள்ளுதல்:
ஒரு சீஷன், தேவன் அவனுடன் இணைக்கும் எல்லா மூலங்களிலிருந்தும் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். பிலிப்பு, எத்தியோப்பிய மந்திரி ஒருவருடன் இருந்தார், அவர் ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தார். அப்போது மந்திரி, "ஒருவர் எனக்கு விளக்கிச் சொல்லாவிட்டால் நான் அதை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்?" என்று கேட்டார் (அப்போஸ்தலர் 8:31). பிலிப்பு ஒரு விசுவாசியல்லாதவரிடமிருந்து சுவிசேஷத்தைப் பகிர்வதற்கான ஒரு உத்தியைக் கற்றுக்கொண்டார். மோசே, ஓபாபை (தன் மைத்துனன்) தனக்குக் கண்களாகவும் காதுகளாகவும் இருக்கச் சம்மதித்தார். அதாவது, வனாந்தரத்தில் தனக்கு வழிகாட்டியாக இருக்க தன் மைத்துனனை ஏற்றுக்கொண்டார் (எண்ணாகமம் 10:29). மேலும், தன் மாமனார் எத்திரோவின் ஆலோசனையையும் அவர் பின்பற்றினார். எத்திரோவின் ஆலோசனைப்படி, தன் வேலையை எழுபது தலைவர்களுக்குப் பகிர்ந்தளித்தார் (யாத்திராகமம் 18:21).

வரலாறு:
"வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ளாதவர்கள் வரலாற்றை மீண்டும் மீண்டும் நிகழ்த்துவார்கள்" என்றொரு பழமொழி உண்டு. நடந்த சம்பவங்கள், நிகழ்வுகள், நிறுவனங்கள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள், மற்றும் வெற்றிகரமான முயற்சிகளிலிருந்து கற்றுக்கொள்வது பயனுள்ள தலைமைக்கு மிக அவசியம்.

வாசிப்பு: 
சிறந்த வாசகர்களே சிறந்த தலைவர்கள்.

 தினசரி கற்றல் என் வாழ்க்கை முறையா? 

Rev. Dr. J.N. Manokaran