பேன் காரணமாக மருத்துவ அவசரம்

ஜூன் 15ம் தேதி, 2024 அன்று லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து நியூயார்க்கிற்குச் சென்ற, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஃபீனிக்ஸ் நகரில் பெண்ணின் தலைமுடியில் பேன் இருப்பதைக் கண்டதால் அவசரமாக தரையிறங்கியது. ஒரு பெண்ணின் தலைமுடியில் பேன் ஊர்ந்து செல்வதைக் கண்டதாக விமானப் பணிப்பெண்களிடம் இரண்டு பயணிகள் தெரிவித்ததாக சாட்சிகள் தெரிவித்தனர். அந்த இரண்டு சிறுமிகளும், அந்தப் பெண்ணின் தலைமுடியில் பூச்சிகள் ஊர்ந்து செல்வதைக் கண்டு விமானப் பணிப்பெண்ணை எச்சரித்தார்கள்  (CNBC TV18, ஆகஸ்ட் 5, 2024). பேன் என்பது சிறிய, இறக்கையற்ற பூச்சிகள், அவை மனித இரத்தத்தை உண்ணும்.  நெருங்கிய தொடர்பு மற்றும் உடமைகளைப் பகிர்வதன் மூலம் பேன் ஒருவரிடமிருந்து மற்றொரு நபருக்கு பரவுகிறது.