ஒரு மனிதன் தன் தோற்றத்தையும் அலங்காரத்தையும் பற்றி மிகுந்த கவனம் கொண்டவராக இருந்தார். வீட்டில் பல கண்ணாடிகளை வைத்திருந்து, வெளியே செல்லும் முன் தன் தோற்றத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் பரிசோதிப்பது அவரின் வழக்கமாக இருந்தது.
வயது முதிர்ந்தபோது, அவரது பார்வை மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. கண் மருத்தவர்களை அணுகினாலும், பார்வை மேம்படவில்லை. இருந்தாலும், கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்ப்பது அவரது கண்களுக்கு மிகுந்த சிரமமாக இருந்தபோதிலும், அந்த பழக்கத்தை அவர் விடவில்லை. துரதிருஷ்டவசமாக, அவர் முழுமையாக பார்வையை இழந்தார். ஆனாலும், இன்னும் கண்ணாடிகளின் முன் நின்று, தன்னைப் பார்க்கிறதுபோல் கற்பனை செய்து உடை அணிய முயன்றார். பல நேரங்களில், அவர் தோற்றம் நகைச்சுவையாக மாறியது. கண்ணாடி மாறவில்லை; ஆனால் அவரது கண்கள் குருடாகிவிட்டன.
வேதாகமம் – ஒரு கண்ணாடி:
அப்போஸ்தலனாகிய யாக்கோபு வேதாகமத்தை ஒரு கண்ணாடிக்கு ஒப்பிடுகிறார் (யாக்கோபு 1:23). கண்ணாடியில் பார்ப்பவர்கள் நிச்சயமாகத் தங்கள் பாவத்தன்மையை அறிந்து, தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்ப முடியும்.
CT ஸ்கேன் மற்றும் MRI:
அப்போஸ்தலனாகிய யாக்கோபு இன்று இருந்திருந்தால், வேதாகமத்தை CT ஸ்கேன் அல்லது MRI போன்றவற்றுடன் ஒப்பிட்டிருப்பார். கண்ணாடி வெளிப்புற தோற்றத்தை மட்டுமே காட்டும்; ஆனால் இன்றைய மருத்துவ கருவிகள் உடலுக்குள் இருக்கும் பாதிப்புகளையும் தொற்றுகளையும் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. “தேவனுடைய வார்த்தை ஜீவனுள்ளதும் வல்லமையுள்ளதும், இருபுறமும் வெட்டும் எந்தப் பட்டயத்தினும் கூர்மையானதும், ஆத்துமாவையும் ஆவியையும், மூட்டுகளையும் மஜ்ஜையையும் பிரிக்கும் வரையிலும் ஊடுருவி, இருதயத்தின் எண்ணங்களையும் ஆலோசனைகளையும் விசாரிக்கிறதாயிருக்கிறது”
(எபிரெயர் 4:12).
குருட்டுத்தனம்:
சாத்தான் எல்லா மக்களுடைய மனக்கண்களையும் குருடாக்கியுள்ளான், அதனால் அவர்கள் தேவனிடமிருந்து அந்நியப்பட்டு அழிந்துபோகிறார்கள் (2 கொரிந்தியர் 4:4). ஒரு பாவி நற்செய்தியைக் கேட்கும்போது, தேவனுடைய ஆவியானவர் அந்தச் செய்திக்குச் செவிகொடுக்க இருதயத்தைத் தூண்டுகிறார். இவ்வாறு, கண்கள் திறக்கப்படுகின்றன, ஒருவர் அற்புதமான ஒளியில் நடக்க முடியும். பார்வை தெளிவாக இருக்க, கண்களைத் தூய்மையாக வைத்திருப்பது அவசியம்.
அலட்சியம்
அலட்சியத்தால், ஒரு நபர் மீண்டும் குருடராக மாறக்கூடும். தேவனுடைய வார்த்தையை வாசிப்பதிலும் (கேட்பதிலும்) தியானிப்பதிலும் தினசரி ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதற்குப் பதிலாக, அவர்கள் மற்ற அன்றாடப் பழக்கவழக்கங்கள் அல்லது அவர்களை வழிதவறச் செய்யும் புதுமைகளால் திசைதிருப்பப்படுகிறார்கள். அவர்கள் வேதாகமத்தின் ஆலோசனையில் நடப்பதற்குப் பதிலாக, Google-ன் ஆலோசனையில் நடந்து, YouTube அடிப்படையில் நிலைப்பாடு எடுத்து நின்று, தீய ஆன்லைன் சமூகங்களில் உட்காருகிறார்கள்.
நான் தினமும் வேதாகமத்தை மனப்பூர்வமாகவும் மகிழ்ச்சியுடனும் தியானிக்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran