சாகச சுற்றுலாவை ஆராய்ந்த ஒரு சுற்றுலாப் பயணி ஆழமான காட்டில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தை அடைந்தார். வித்தியாசமான வாசகங்கள் அடங்கிய டி-சர்ட் அணிந்திருந்த சில சிறுவர்கள் இருந்தனர். ஒரு முழக்கம்; போ, தூக்குல தொங்கு! மற்றவை மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுகளுக்கான விளம்பரங்களாக இருந்தன. இவர்களது டி-ஷர்ட்டில் உள்ள எழுத்துக்கள் குறித்து விசாரித்தபோது, அவர்களுக்கு ஆங்கில மொழி தெரியாததால் அர்த்தம் தெரியவில்லை. சிலர் தங்கள் விளக்கங்களைக் கொடுக்க முயன்றனர். இருப்பினும், ஆங்கிலம் தெரிந்தவர்கள் அந்த செய்திகளைப் படிக்கும்போது தவறாக தானே வழிநடத்தப்படுவார்கள்.
அறியாமை:
அவர்கள் அறியாமையால் ஒரு செய்தியை எடுத்துச் சென்றனர். ஆனாலும், ‘போ, தூக்கில் தொங்கு’ என்ற செய்தியை யாராவது படித்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டால் அது கொலையாகிவிடுமே. அறியாமை மரணத்திற்கு சாக்காக இருக்க முடியாது அல்லவா. துரதிர்ஷ்டவசமாக, பல மதங்கள் சிறுவர்களைப் போல, அறியாமையால் செய்திகளைப் பரப்புகின்றன, உண்மையை அறியவில்லை. சத்தியத்தைத் தேடுவதற்குப் பதிலாக, பெரும்பாலானோர் அறியாமையில் வாழ விரும்புகின்றனர், அறியாமை மற்றும் மூடநம்பிக்கைகளைப் பரப்புகிறார்கள்.
தவறான விளக்கம்:
சுற்றுலாப் பயணிகளுக்கும் மொழி தெரியாது என்று சில சிறுவர்கள் நினைத்தனர், எனவே சில விளக்கங்களை அளித்தனர். அதே வழியில், பல மதங்கள் இரகசிய அறிவு அல்லது ஞானம் அல்லது புனித மொழிக்கான திறவுகோலைக் கோருகின்றன, மேலும் சில பிரசங்கியார்கள் மட்டுமே அதை விளக்க முடியும், ஆனால் சாதாரண மக்களோ தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.
இலவசம்:
தேவையின் நிமித்தம், அவர்கள் ஆடை அணிய வேண்டிய நேரத்தில், அந்த டி-சர்ட்களை சமூக நல அமைப்பிடமிருந்து இலவசமாகப் பெற்றனர். இது அவர்களின் சூழலில் அவர்களுக்கு உதவியது, ஆனால், அவர்கள் ஒரு செய்தியைப் பரப்புகிறார்கள், ஒருவேளை அந்த ஜனங்கள் விரும்பாததாக கூட இருக்கலாம் அல்லது கவனக்குறைவாக இருக்கலாம். அநீதியின் கருவிகளாக மதத் தலைவர்கள் உட்பட பலரையும் சாத்தான் பயன்படுத்துகிறான், துன்பத்தையும், இழப்பையும், நித்திய மரணத்தையும் கொண்டு வருகிறான் (ரோமர் 6:13).
பயனடைபவர்கள்:
சில செய்திகள் சரியானவை மற்றும் நல்லவை அல்ல என்பதை உணர்ந்தனர். ஆனாலும், அவர்கள் கொடையாளர்களுக்கு விசுவாசமாக இருக்க விரும்பினர். அவர்களுக்கு உதவியவர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பது தான் முதன்மையாக இருந்ததே தவிர சத்தியம் அல்ல. பலர் தங்கள் முன்னோர்கள், கலாச்சாரம் மற்றும் மரபுகளுக்கு விசுவாசமாக இருக்க விரும்புவதையும், நற்செய்தியின் சத்தியத்தை நிராகரிப்பதையும் நாம் காணும்போது ஆச்சரியப்படுவதற்கில்லை. அதாவது உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பதை போல ஒரு நபர் தான் செய்யும் உதவிக்கு உண்மையாக இருக்க வேண்டும் மற்றும் அவர்கள் மூதாதையருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், அவர்களின் வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
நான் சத்தியத்தில் நடக்கிறேனா, மற்றவர்களுக்கு சத்தியத்தை விளக்கி கூறுகிறேனா?
Rev. Dr. J.N. Manokaran