உறவுகளைப் பேணிக்காத்தல்

இந்நாட்களில் திருமணங்கள் மிகவும் உடையக்கூடியதாகி விட்டன.  எந்தச் சிறப்பான காரணமுமின்றி ஒரு திருமண உறவு விவாகரத்தால் முடிவடைகிறது.  அது முட்டுச்சந்தைப் போன்று குறுகிய தெருவைப் போன்றதாக உள்ளது.
ஒரு திரைப்பட பிரபலமான நடிகை, தாம் 26 ஆண்டுகள் திருமண வாழ்க்கையை நிறைவு செய்தபோது, வெற்றிகரமான திருமணத்திற்கு இரண்டு காரணங்களைச் சொன்னார்: பகுதி காது கேளாமை மற்றும் தேர்ந்தெடுத்த மறதி. அவர் இவ்வாறாக: “நாங்கள் இருவரும் முற்றிலும் மாறுபட்ட தன்மை கொண்டவர்கள், பல கருத்து வேறுபாடுகளும் இருந்தன.  இருந்தாலும், இந்த இரண்டு கொள்கைகளையும் பின்பற்றி ஒன்றாக வாழ தீர்மானித்தோம்” என்று கூறினார். 

பகுதி கேளாமை (Partial deafness):
உறவுகளில், குறிப்பாக குடும்பங்களில், பிறர் சொல்வதைக் கேட்டு மனம் புண்படாமல் இருக்க தீர்மானிப்பது மிகவும் அவசியம். நமக்கு நெருக்கமானவர்கள், நாம் நேசிப்பவர்கள் தான் அதிகம் காயப்படுத்தும் ஆற்றலை உடையவர்கள். வேதாகமம் அறிவுறுத்தும் சரியான, அறிவார்ந்த தீர்வு இதுதான்; “சொல்லப்படும் எல்லா வார்த்தைகளையும் கவனியாதே; கவனித்தால் உன் வேலைக்காரன் உன்னை நிந்திப்பதைக் கேள்விப்படவேண்டியதாகும். அநேகந்தரம் நீயும் பிறரை நிந்தித்தாயென்று, உன் மனதுக்குத் தெரியுமே” (பிரசங்கி 7:21-22). 
முதலாவது, அவர்கள் சொல்வது அவர்கள் மனதில் உண்மையாக இல்லாமலும் இருக்கலாம். 
இரண்டாவது, அது கோபம் அல்லது விரக்தி காரணமாக வந்த ஒரு தற்காலிக வெளிப்பாடாக இருக்கலாம்.
மூன்றாவது, ஒரு வாக்கியத்தின் சில வார்த்தைகள் மட்டுமே மந்தமாகவோ முணுமுணுப்பாகவோ கேட்கும்போது, முழுமையான உண்மை தெரியாமல் தவறாகப் புரிந்து கொள்ளாமல், அவரின் எண்ணத்தையும் மனநிலையையும் நல்ல நோக்கில் கருதி, அவருக்குச் சாதகமாக  நீதியை அளிக்க வேண்டும்.
நான்காவது, அதிகாரம் அல்லது பதவி காரணமாக நேரில் கோபத்தை வெளிப்படுத்த முடியாத பல சூழல்களில் நாமும் இதையே மற்றவர்களுக்கு செய்கிறோம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மறதி (Selective Amnesia):
முக்கியமல்லாதவற்றை மறக்கக் கற்றுக்கொள்வது நல்ல உறவுகளுக்குத் தேவையான ஒரு திறனும் கலையும் ஆகும். மன்னித்து, அனுபவத்தை மறந்து, அதிலிருந்து பாடத்தை மட்டும் கற்றுக்கொள்வது எளிதான காரியம் அல்ல. ‘தேர்ந்தெடுத்த மறதி’ என்பது சில விஷயங்களை திட்டமிட்டே மறந்து விடும் மனப்பாங்கை குறிக்கிறது. இது கணவன்-மனைவி வாழ்வில் அன்பு ஆதிக்கம் செலுத்தும் போது மட்டுமே சாத்தியமாகும்.
ஏனெனில், “அன்பு திரளான பாவங்களை மூடுகிறது” (1 பேதுரு 4:8). அப்போஸ்தலனாகிய பவுல் அன்பின் நடைமுறைப் பாடங்களை இவ்வாறு போதிக்கிறார்; “ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (எபேசியர் 4:32).  
முதலில், கனிவாகவும், மரியாதையாகவும், கண்ணியமாகவும், உணர்திறன் உடையவர்களாகவும் இருப்பது. மற்றவர்கள் நம்மை எப்படி நடத்த வேண்டும் என்று  விரும்புகிறோமோ அதைப் போல, நாம் மற்றவர்களை நடத்த வேண்டும் (லூக்கா 6:31).
இரண்டாவதாக, அது மென்மையாகவும், குழந்தைத்தனமாகவும், பாசமாகவும் இருக்க வேண்டும். 
மூன்றாவதாக, கிறிஸ்து நம்மை நிபந்தனையின்றி மன்னித்ததுபோல், வாழ்க்கைத்துணையை நாமும் நிபந்தனையின்றி மன்னிக்க வேண்டும் (எபேசியர் 4:32).

வாழ்க்கையில் இந்த கொள்கைகள் என்னிடம் உள்ளதா?
 

Rev. Dr. J.N. Manokaran