லக்னோ நகரைச் சேர்ந்த ஒருவர், இணையதள வணிகம் மூலமாக, வீட்டிற்கு வந்த பின்பு பணம் கொடுத்தால் போதுமானது என்ற முறையில் ஒரு ஆப்பிள் ஐபோனை ஆர்டர் செய்தார். டெலிவரி ஏஜென்ட் போனை டெலிவரி செய்ய வந்தபோது, அவரைக் கொன்று சாக்கு மூட்டையில் போட்டு கால்வாயில் வீசினார். திருடப்பட்ட போன் சுமார் 150000 ரூபாய் (USD 2000) ஆகும் (தி இந்துஸ்தான் டைம்ஸ், அக்டோபர் 1, 2024). பத்துக் கட்டளைகளில் குறைந்தது நான்கையாவது அவர் மீறினார் (யாத்திராகமம் 20:1-21).
இச்சையாதிருப்பாயாக:
ஒருவருக்குத் தகுதியில்லாததை விரும்புவது அல்லது எட்டாத ஒன்றை விரும்புவது பேராசையாகும். வேறொருவரின் சொத்தான ஒன்றை சொந்தமாக அல்லது அனுபவிக்க முயற்சிப்பது சட்டத்தை மீறுவதாகும். சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் ஆடம்பரமான கேஜெட்களை சொந்தமாக்குவதற்கான ஆசை மற்றும் ஆர்வத்தை மனதில் தூண்டுகின்றன. ஒரு கிறிஸ்தவர் தனது இதயத்தை தீய ஆசைகள் அல்லது பேராசையிலிருந்து பாதுகாக்க வேண்டும்.
பொய் சொல்லாதிருப்பாயாக:
அந்த நபரின் நோக்கம், அந்த பொருளுக்கு பணம் செலுத்துவது அல்ல, ஆனால் டெலிவரி முகவரைக் கொன்று விலையுயர்ந்த போனை சொந்தமாக்குவதே ஆகும். இது திட்டமிட்டு, முன்ஆலோசனையோடு செய்த கொலை. தன்னால் பணம் கொடுத்து, போனை வாங்க முடியாது என்பது அவருக்குத் தெரியும், ஆனால் பொய் சொல்லி இணையதள வியாபாரிகளை ஏமாற்றிவிட்டார்.
களவு செய்யாதிருப்பாயாக:
டெலிவரி செய்பவர் போனை டெலிவரி செய்ய வந்தபோது, அவரிடம் பணம் கொடுக்காமல், அதைப் பெற்றுக் கொண்டார், மேலும் வன்முறையில் ஈடுபட்டார். தனது நண்பருடன் இணைந்து, போனைத் திருடி அந்த நபரைக் கொன்றார்.
கொலை செய்யாதிருப்பாயாக:
ஒரு மனிதனின் உயிர் தேவனின் பார்வையில் உயர்ந்தது என்று பத்து கட்டளைகள் கற்பிக்கின்றன. உயிர் கொடுப்பவர், எடுப்பவர் தேவன் மாத்திரமே. அத்தகைய அதிகாரம் எந்த மனிதனுக்கும் இல்லை.
சிதைந்த மதிப்புகள்:
ஒரு மனிதனை விட ஐபோன் மதிப்புமிக்கது என்று அந்த மனிதன் (போனை டெலிவரி செய்ய வந்த நபர்) நம்பினான் போலும். அவன் ஒரு கேஜெட்டை விரும்பினான், ஆனால் மனிதர்களை நேசிப்பதற்கும் கேஜெட்களைப் பயன்படுத்துவதற்கும் பதிலாக மனிதனை வெறுத்தான். ஆப்பிள் ஐபோன் அவனது கடவுளாக மாறியது மற்றும் அதைப் பெற மனித பலி செய்யத் தயாராக இருந்தான்.
சாத்தானின் நோக்கம்:
சாத்தான் திருடவும், கொல்லவும், அழிக்கவும் வருகிறான் (யோவான் 10:10).சாத்தானைப் போல இந்த மனிதனும் டெலிவரி செய்ய வந்த மனிதனுக்கு ஒரு பொறியை வைத்து அவனைக் கொன்றான். கொன்றவனுக்கு அந்த டெலிவரி செய்ய வந்த மனிதனை முன்பின் தெரியாது, ஆனாலும் அவனைக் கொன்றான்.
நான் என் இருதயத்தை பேராசைக்கு எதிராக காத்துக்கொள்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran