மறதி என்பது மனிதர்களுக்கு இயல்பானது. பலர் நல்லதைச் செய்கிறார்கள், ஆனால் அது விரைவில் மறக்கப்பட்டுவிடுகிறது. ஒரு ஏழை மனிதன் ஒரு நகரத்தை பாதுகாக்கவும் காப்பாற்றவும் உதவினார், ஆனால் அந்த நகரத்தின் மக்கள் அதை நினைவில் வைத்துக்கொள்ளவில்லை (பிரசங்கி 9:15). உண்மையில், பல நல்ல மனிதர்கள் மறக்கப்படுகிறார்கள், ஆனால் பல நேரங்களில் தீயவர்கள் சிலை வைத்து போற்றப்படுகிறார்கள். ஆனால் தேவன் இஸ்ரவேலரிடம், தான் செய்த நன்மைகளை அவர்கள் வாழ்க்கை முழுவதும் மனதில் வைத்திருக்கவும், தங்கள் சந்ததிகளுக்கு கற்பிக்கவும் தேவன் கற்றுக் கொடுத்தார்
உடன்படிக்கையை நினைவில் கொள்ளுங்கள்:
இஸ்ரவேல் ஜனங்கள், கர்த்தருடன் ஓரேப் மலையில் செய்த உடன்படிக்கையை நிச்சயமாக நினைவில் வைத்திருக்க வேண்டும். அந்த தலைமுறை எகிப்தில் தேவன் அவர்கள் விடுதலைக்காக நிகழ்த்திய வல்லமையான கிரியைகளை, வனாந்தரத்தில் நடந்த அதிசயங்களை, மேலும் தேவனின் உண்மைத்தன்மையையும் நேரடியாக கண்டுள்ளனர். தேவன் இஸ்ரவேல் ஜனங்களுடன் ஒரு உறுதியான உடன்படிக்கை செய்தார். அதை அவர்கள் ஒருபோதும் மறக்கக்கூடாது. புதிய ஏற்பாட்டு விசுவாசிகளைப் பொறுத்தவரை, அவர்கள் கல்வாரியை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது, தேவனுடைய குமாரன் நம் பாவங்களுக்கு பலியாகி, தம்மில் விசுவாசம் கொண்ட மக்களுடன் செய்த புதிய உடன்படிக்கையை மறக்கக்கூடாது. இது அவர்கள் திருச்சபையில் பங்கேற்கும் ஒவ்வொரு பரிசுத்த பந்தியிலும் ஒவ்வொரு முறையும் நினைவுகூரப்படுகிறது காலமெல்லாம் நினைவு கூரப்படவும் வேண்டும்.
கட்டளைகளை நினைவில் கொள்ளுங்கள்:
தேவன் இஸ்ரவேலரிடம் தம்முடைய கட்டளைகளை நினைவில் கொள்ளச் சொன்னார் . தேவனை நேசிப்பவர்கள், அவருடைய கட்டளைகளை கைக்கொள்வார்கள் மலையான பகுதிகளில், மக்கள் பள்ளத்தில் விழாமல் பாதுகாக்க வளைவுகளின் அருகே தடுப்புச் சுவர்கள் அல்லது வேலி (guardrails) அமைக்கப்படுகின்றன. அதுபோலவே, தேவனின் கட்டளைகள் ஒரு நபரை பாவத்திலும் மரணத்திலும் விழாமல் காக்கும் பாதுகாப்புச் சுவர்களாக இருக்கின்றன.
திருச்சபையை நினைவில் கொள்ளுங்கள்:
ஒவ்வொரு மனிதரும், கர்த்தரை தம்முடைய தனிப்பட்ட இரட்சகராக விசுவாசித்து ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அதற்குப் பிறகு, ஒவ்வொரு சீஷனும் ஒரு உள்ளூர் திருச்சபையின் உறுப்பினராக இருந்து, பரிசுத்தவான்களுடனான ஐக்கியத்தை அனுபவிக்க வேண்டும் (எபிரேயர் 10:25).
கட்டுண்டவர்களை நினைவில் கொள்ளுங்கள்:
தம்மைப்போல் சுவிசேஷத்திற்காக கட்டுண்டவர்களை நினைவில் கொள்ளுங்கள் என்று பவுல் தனது வாசகர்களுக்குச் சொல்லுகிறார் (கொலோசெயர் 4:18). உலகின் பல பகுதிகளில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், துரத்தப்படுகிறார்கள், பிடிக்கப்படுகிறார்கள், மேலும் கடுமையாக ஒடுக்கப்படுகிறார்கள். அவர்கள் நினைவில் வைக்கப்பட வேண்டும், அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும், முடிந்த போதெல்லாம் உதவிக்கரம் நீட்ட வேண்டும்.
ஆணையை நினைவில் கொள்ளுங்கள்:
ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கைக்கு ஒரு முக்கியமான நோக்கம் உள்ளது; அது கர்த்தருக்காக சீஷர்களை உருவாக்குவது ஆகும். அவருடைய ராஜ்யத்தை விரிவுபடுத்துவதே அந்த வாழ்வின் முக்கிய முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
நான் இவற்றை சிரத்தையுடன் நினைவில் கொள்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran