ஒரு அறிஞர், எப்போதும் அதிகம் வாசித்து எழுதிக் கொண்டிருப்பவர், இடது கண்ணில் ஒரு பிரச்சினை ஏற்பட்டது. சிறிய எழுத்துகளில் உள்ள புத்தகங்களை அவர் வாசிக்க முடியவில்லை. கண்ணாடி ஜன்னலின் வழியாக வெளியே பார்க்கும்போது தெளிவாகப் பார்க்க முடியவில்லை. பலமுறை அந்த ஜன்னல் கண்ணாடியைத் துடைத்தும் பயனில்லை. பின்னர் அவர் கண் மருத்துவரிடம் பரிசோதனைக்கு சென்றார். நவீன தொழில்நுட்பத்தின் மூலம், மருத்துவர் கண்களில் சிறிய புரைகள்; அதாவது இறந்த செல்கள் (dead cells) மிதந்து கொண்டு பார்வையை மறைத்துக் கொண்டிருப்பதை கண்டறிந்தார். லேசர் சிகிச்சை மூலம் அவற்றை அகற்றி, முழுமையான பார்வையை மீட்டுத் தந்தார். அதனால் அவர் சிறப்பாக வாசிக்கவும், ஜன்னலின் வழியாக தெளிவாகக் காணவும் முடிந்தது. ஆம், சிறிய துகள்களும் பார்வையை மறைக்கக் கூடியவை; அப்படியிருக்க, உத்திரங்கள் போன்ற பெரியவை எவ்வளவு பெரிதாகக் கண்ணோட்டத்தை மாறுபடுத்தும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, பிறர் கண்களில் இருக்கும் சிறுதுகள்களை எடுப்பதற்கு முன், தங்கள் கண்களில் உள்ளதை அகற்றிக் கொள்ளுமாறு எச்சரித்தார் (மத்தேயு 7:3-5). கர்த்தர் இங்கு நகைச்சுவை கலந்த முறையில் கூறினார். ஒருவரின் கண்களில் உத்திரம் இருக்க முடியாது. ஆனால், பிறரைப் பற்றிய மனிதர்களின் கருத்துகள் மற்றும் அணுகுமுறைகள் இப்படிப் பெரிதும் மிகைப்படுத்தப்பட்டவையே.
ஓரவஞ்சனை:
இது யாரையோ அல்லது எதையோ காரணமில்லாமல் வெறுப்பதோ, விரும்பாமலிருப்பதோ ஆகும். சாதி, இனம், மொழி, மதம், பாலினம் போன்ற அடிப்படையில் இத்தகைய உணர்வு தோன்றுகிறது. ஒரு விமானப் பயணி, விமானத்தை ஓட்டுபவர் ஒரு பெண் என்று அறிந்ததும், அந்தப் பயணத்தைத் தவிர்த்தார். சிலர் பொதுவாகவே பிறரை இகழ்ந்து, “அந்த மொழி பேசுபவர்கள் எல்லாரும் இப்படி தான்” என்று குற்றம் சாட்டுவார்கள். இப்படிப்பட்ட பாகுபாடு ஒரு ஆபத்தான பாவம். ஏனெனில் இது கண்மூடித்தனமானது, கடுமையானது, அநியாயமானது, எந்த அடிப்படையும் இல்லாதது.
மிகக் கேடு (Worst):
சிலருக்கு, பிறரை எப்போதும் மிகக் கேடான வகையில் நினைக்கும் பழக்கம் உண்டு. அவர்களின் மனதில், மற்றவர்கள் சுத்தம், சமூக நிலை, கல்வி, மரியாதை, பதவி ஆகியவற்றில் தாழ்ந்தவர்களாகவே தோன்றுகின்றனர்.
தவறுகள் மட்டுமே (Only faults):
பலர், பிறர் குறைகள் பற்றியே பேச விரும்புவார்கள். ஒருவரிடம் தொண்ணூற்று ஒன்பது நல்ல பண்புகள் இருந்தாலும், ஒரே ஒரு குறை இருந்தால் அதை மட்டுமே பேசிக் கொண்டிருப்பார்கள். மற்ற நல்லவற்றை புறக்கணித்து விடுவர். ஒருவரின் முழு வாழ்க்கையும், அவர் செய்த மிகக் குற்றமான ஒரு தருணத்தின் அடிப்படையிலேயே மதிப்பிடப்படுகிறது.
உள்நோக்கங்கள் (Hidden motives):
சிலருக்கு, ஒருவரின் எளிய வார்த்தையிலும் சாதாரண செயலிலும் கூட மறைந்திருக்கும் நோக்கத்தை தேடும் பழக்கம் உண்டு.
மற்றவர்களுடன் நான் பழகும் போது கரிசனையுடன் நடந்துக் கொள்ளும் ஒரு நபரா?
Rev. Dr. J.N. Manokaran