மற்றவர்களின் உரிமைகளை மதித்தல்

இருப்பிடங்களில் கால்களை வைத்துக்கொள்வது, பொதுயிடங்களில் குப்பையைப் போடுவது, மொபைலில் சத்தமாகப் பேசுவது, சத்தமாக இசையை இயக்குவது, ஹெட்போன்கள் இல்லாமல் முழு திரைப்படங்களை பார்ப்பது போன்ற செயல்கள் இன்று வழக்கமானவையாகிவிட்டன. இவற்றை யாராவது சுட்டிக் காட்டினால்கூட, அதை யாரும் கருத்தில் கொள்ளாமல் ஒதுக்கும் நிலை காணப்படுகிறது. சமுதாய ஒழுங்குக்குப் புறம்பான இவ்வாறான நடத்தை இப்போது பொதுவான நடப்பாகி விட்டன. அதைவிட வேதனையாகக் காணப்படுவது, குழந்தைகள் கூட இப்போதெல்லாம், தங்களது தாத்தா பாட்டி வயதுள்ள ரயில்வே அதிகாரிகளை மரியாதையின்றி பேசும் அளவுக்கு, மரபும் நாகரிகமும் பின்தள்ளப்பட்டுள்ளன (தி டெலிகிராப், மார்ச் 18, 2025). முன்னோர்கள் விரும்பிய கண்ணியமான நடத்தை, மரியாதைமிக்க உரையாடல்கள், சீரிய அணுகுமுறைகள் இன்று பழமையாகவும், நினைவுகளாகவே மாறிவிட்டன. மேற்கத்திய உலகில் ஒருகாலத்தில் பிறரது உரிமைகளுக்கு எப்போதும் மரியாதை இருந்தது. அது வேதத்தில் கூறப்படும் ராஜரீக பிரமாணமான "உன்னைப் போலவே உன் அயலானையும் நேசி" (யாக்கோபு 2:8) என்ற வாக்கியத்தில் வேரூன்றியுள்ளது. தேவனின் வார்த்தை அப்போது சமூகத்தில் பரவலாகப் பிரசங்கிக்கப்பட்டதால், அது மக்களின் எண்ணங்களிலும் வாழ்க்கை முறையிலும் ஊடுருவியிருந்தது. அதன் விளைவாக, பொதுமக்கள் நடத்தை மரியாதையும் மரபும் கலந்து இருந்தது, சீரும் சிறப்பும் மிக்கதாக இருந்தது.

கடவுளைப் புறக்கணித்தல்:
துரதிருஷ்டவசமாக, இன்றைய பள்ளிகளில் தேவன் படைப்பாளியாக கற்பிக்கப்படவில்லை. வேதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தேவனுடைய படைப்புக்கு பதிலாக, பெரு வெடிப்புக் கோட்பாடு, பரிணாமக் கோட்பாடு போன்ற நகைச்சுவையான கோட்பாடுகள் கற்பிக்கப்படுகின்றன. ஒரு கடவுளோ அல்லது படைப்பாளியோ இல்லையெனில், தேவனை அஞ்சும் பயமும் இருக்காது. எனவே, ஞானத்தின் தொடக்கமே தவறாகிறது. உலகியலான ஞானத்தை நாடி, இளம் தலைமுறை சபையை விட்டு விலகி, ஞானம், அர்த்தம் மற்றும் நோக்கத்தை யோகா போன்ற மூடநம்பிக்கைகளில் தேடிச் செல்கின்றனர்.

வேதாகமத்தைப் புறக்கணித்தல்: 
வேதாகமத்தின் தேவன் மறுக்கப்பட்டபோது, தெளிவாகவே வேதாகமமும் மறக்கப்பட்டது. அது பெருமையுடன் எடுத்துச் செல்லப்படவில்லை; மேசைகளிலும் புத்தகக் களஞ்சியங்களிலும் அவசியமாக வைத்திருக்கப்படவில்லை; பொதுயிடங்களில் வாசிக்கப்படவில்லை; ஏராளமான கிறிஸ்தவர்கள் கூட அதை முற்றிலும் மறந்துவிட்டார்கள். தேவனுடனும், அவருடைய கட்டளைகளுடனும் உறவு இல்லாமல், பிறருடன் நாம் கொண்டிருக்கும் எந்த உறவுக்கும் அர்த்தமோ ஆழமோ இருக்க முடியாது.

திருச்சபையைப் புறக்கணித்தல்: 
தேவனையும் வேதாகமத்தையும் இழந்தபின், திருச்சபைகளும் நிராகரிக்கப்பட்டன. மேற்கத்திய நாடுகளில் பல திருச்சபைக் கட்டிடங்கள் விற்று விடப்படவும், ஹோட்டல்கள், மது கூடங்கள் அல்லது பிற மதங்களின் பயன்பாடுகளுக்காக மாற்றி அமைக்கப்படவும் செய்தது. ஒரு காலத்தில் திருச்சபையில் காணப்பட்ட ஒழுங்கான நடத்தையே, பொது இடங்களிலும் பின்பற்ற வேண்டிய ஒழுக்கத்தின் மாதிரியாக எடுத்துக்கொண்டார்கள்.

குடும்பங்களைப் புறக்கணித்தல்:   
இந்த எல்லா காரணிகளும் குடும்பங்களை சிதைத்தன. விவாகரத்து ஒரு சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது. தேவனுடைய உடன்படிக்கையை அறியாதபோது, ஒரு துணையுடன் ஏற்படுத்தப்படும் உறவையும் சரியாகப் புரிந்துகொள்ள முடியாது; அது தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டு, சிதைக்கப்பட்டது. பூமியில் சொர்க்கமாக இருக்க வேண்டிய குடும்பங்கள், நரகமாகவே மாறின.

மற்றவர்களைப் புறக்கணித்தல்: 
பொதுயிடங்களில் இளம் தலைமுறை காட்டும் மரியாதையற்ற நடத்தை, மேலே கூறப்பட்ட அனைத்து மூல காரணங்களின் பயனாகும்.

நான் ராஜரீகப் பிரமாணத்தைப் பின்பற்றுகிறேனா?  

Rev. Dr. J.N. Manokaran