போதகர்களுக்கான கடுமையான பயிற்சி

ஒரு ஆய்வில், போதகர்களில் 10% பேர் தான் தங்கள் வேலையை மிகவும் நன்றாக செய்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 20% பேர் போதுமான அளவு செய்கிறார்கள். இன்னொரு 20% பேர் சராசரி மட்டுமே. ஆனால், 50% பேர் எந்த பயனும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இந்த நிலையை மாற்ற முசோரியில் உள்ள இந்திய சிவில் சர்வீஸுக்குப் பயிற்சி அளிப்பது போல் போதகர்களுக்கும் கடுமையாகவும் சீராகவும் பயிற்சி அளிக்க வேண்டும் என்று ஒரு பிஷப் பரிந்துரைத்தார். எரேமியா 48:10 இப்படியாக கூறுகிறது; “கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்”.

அழைப்பா அல்லது தொழிலா?: 
ஊழியம் என்பது ஒரு தொழில் அல்ல; தேவனிடமிருந்து கிடைக்கும் ஒரு அழைப்பு. ஜான் பைப்பர் போதகர்களுக்காக ஒரு புத்தகத்தை எழுதினார்; சகோதரர்களே, நாம் தொழில் வல்லுநர்கள் அல்ல.  அவர் எழுதுகிறார்: "தொழில் வல்லுநர்களின் மனநிலை ஒரு தீர்க்கதரிசியின் மனநிலை அல்ல. அது கிறிஸ்துவின் அடிமையின் மனபான்மையும் அல்ல. தொழில்முறை மனநிலை, கிறிஸ்துவிய ஊழியத்தின் உள்ளார்ந்த இயல்புக்கும் இதயத்துக்கும் பொருந்தாது. தொழில்முறையில் குழந்தைப்போன்ற நம்பிக்கை இல்லை (மத்.18:3), இரக்கமுள்ள இருதயமும் இல்லை (எபே.4:32), தேவனை ஏங்கி தேடும் ஆர்வமும் இல்லை (சங்.42:1). 

விடாமுயற்சி:
கிறிஸ்துவிய ஊழியம் என்பது சோம்பேறிதனத்தையும் அலட்சியத்தையும் விட ஒழுக்கமும் சிறப்பும் உள்ளவராக இருப்பதை குறிக்கிறது. இது வெறும் பிரசங்கம் அல்லது போதனை மட்டுமல்ல; சிறியது போலத் தோன்றும் செயல்களிலும் உறுதியாக செயல்பட வேண்டும்; உதாரணமாக: நாற்காலிகளை ஒழுங்குபடுத்துதல், மேடையை தயார் செய்தல், தரையை சுத்தம் செய்தல், வரவேற்பாளர் பணிகள், குழந்தைகளுக்குப் போதித்தல், சிலந்தி வலைகளை அகற்றுதல், பரிசுத்த பந்தியில் உதவுதல், இசை வாசித்தல் போன்றவை. தன்னார்வலர்கள், மூப்பர்கள், உதவியாளர்கள் மற்றும் ஊழியத் தலைவர்கள் இவர்களுக்கெல்லாம் தங்கள் பொறுப்புகளில் ஒழுக்கமாக செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

கடின உழைப்பு:
ஊழியம், எங்கு செய்தாலும், அது ஒரு கடினமான வேலை. இது ஒரு எளிய வேலை அல்ல, ஆனால் ஒரு குறிப்பிடத்தக்க நித்திய பணி. என்ன செய்தாலும், அது நித்தியத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மூன்று வயது குழந்தைக்கு ஞாயிறு பள்ளியில் கற்பிப்பதும் ஒரு முக்கியமான ஊழியமே. இதற்கு மிகுந்த ஆயத்தம், ஜெபம் மற்றும் அர்ப்பணிப்பு தேவை, இவை அனைத்தும் கடினமான உழைப்பே. 

அர்ப்பணிப்பு: 
ஊழியம் (சாதாரண, பகுதிநேர, முழுநேர, கூடுதல் நேரம்) என்பது அர்ப்பணிப்பு.  முதலில், தேவனிடம் அர்ப்பணிப்பு தேவை, அதாவது தேவனுக்கு கணக்குக் கொடுக்க வேண்டும். தேவனிடம் யாரும் சாக்குப்போக்கு சொல்ல முடியாது. 
இரண்டாவதாக, மக்களிடம் அர்ப்பணிப்பு. மக்களுக்கான பணி; அவர்களை நேசித்து அவர்களிடம் அர்ப்பணிப்பு இல்லாமல், அது சாத்தியமில்லை.  மூன்றாவது, தேவனுடைய வார்த்தைக்கு அர்ப்பணிப்பு அவசியம். அனைத்து ஊழிய மற்றும் அருட்பணி முயற்சிகளும் வேதாகமத்திலிருந்து உருவாகின்றன.  நான்காவதாக, குடும்பத்திற்கு அர்ப்பணிப்பு.  ஊழியத்தில் ஈடுபடும் எவரும் தங்கள் குடும்பத்தை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. 

 நான் கர்த்தருடைய ஊழியத்தை அர்ப்பணிப்போடு செய்கிறேனா? அல்லது அசதியாய் செய்கிறேனா

Rev. Dr. J.N. Manokaran