பெரும்பாலும் எல்லா நகரங்களிலும் திட மற்றும் திரவ கழிவுகளை சரியாக நிர்வகிப்பது ஒரு பெரிய சவாலாக இருக்கிறது. புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும், புது புது சிக்கல்கள் தொடர்ந்து ஏற்படுகின்றன. பாவம் என்பது உருக்கப்படும் நேரத்தில் உலோகத்தின் மேலே உருவாகும் கழிவு திரட்டுடன் அதாவது கசடுடன் ஒப்பிடப்படுகிறது (சங்கீதம் 119:118-120). உலோக ஆலைக்காரன் அசுத்தத்தை நீக்குவான் (ஏசாயா 1:22; எரேமியா 6:28-30; எசேக்கியேல் 22:18-19). ஆம்,
பாவமும் கசடு போலதான். அது தேவன் உருவாக்கிய இவ்வுலகை கெடுக்கிறது, மேலும் மனித கண்ணியத்தை மதிப்பிழக்கச் செய்கிறது.
அழுக்கு மற்றும் அசுத்தமானது:
பாவம் ஒரு மனிதனை அழுக்கும், அசுத்தமானதுமாக ஆக்கும் தீமையுடன் ஒப்பிடப்படுகிறது. இது ஒருவரை தேவனுடைய சந்நிதிக்கு தகுதியற்றவராக மாற்றுகிறது. பாவம், தேவனுடனும், அவரது நியமனங்களுடனும், மற்றவர்களுடனும் உள்ள உறவை பாதிக்கிறது.
மந்தமானது:
திரட்டு அல்லது கழிவுப் பொருள் ஒரு உலோகத்தின் பொலிவையும், பிரகாசத்தையும் மகிமையையும் இழக்கச் செய்கிறது. பளபளப்பாக இருக்க வேண்டிய உலோகம் மங்கலாக தெரிகிறது. அனைவரும் பாவம் செய்திருக்கிறார்கள்; அவர்கள் தேவனுடைய மகிமையை அடையமுடியாதவர்களாக இருக்கிறார்கள் (ரோமர் 3:23) என வேதாகமம் அறிவிக்கிறது.
வஞ்சகமானது:
திரட்டு மேலே இருக்கும் உலோகத்தைப் போல் தோன்றலாம். ஆனால் அது உண்மையில் உலோகம் அல்ல; அது மோசமான, மயக்கமூட்டும் கழிவுப் பொருள். அதுபோல், ஒரு பாவி நீதிமானைப் போல் நடிக்கலாம். ஆனால் பாவிகளின் அனைத்து நியாயமும் தேவனுடைய பார்வையில் அழுக்கான கந்தையாகவே இருக்கிறது.
தூசி போன்றது:
பாவம் தூசியைப் போல் பயனற்றதாக இருக்கிறது. அதில் மதிப்பும் இல்லை, அர்த்தமும் இல்லை, தேவைப்படும் எந்த நன்மையும் இல்லை. இது நல்லதும் அழகானதுமான எதையும் அளிக்கவில்லை. மேலும், அது மனிதர்கள் தேவனுடன் ஐக்கியம் கொள்ளவும் தொடர்பும் கொள்ளும் வழியில் தடையாகவும், அடையாளமாகவும் நிற்கிறது.
சேதமானது:
கழிவு உலோகத்தை கெடுக்கக்கூடும், ஏனெனில் அது துருப்பிடிக்க வழிவகுக்கிறது. கறையுடன் இருக்கும் உலோகம் நாசமடைந்து பாழடையும். அதுபோல், பாவம் ஒரு மனிதனின் சுயமரியாதையையும், தன்னம்பிக்கையையும், கண்ணியத்தையும் பறித்து விடுகிறது. உடல், மனம், உளவியல் மற்றும் ஆவிக்குரிய எல்லா நிலைகளிலும் ஒரு நபரை சேதமடைந்து, முழுமையற்றவராக்கி விடுகிறது, ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது.
சுத்திகரிப்பு:
உலோகம் பயனுள்ளதாகவும் பயன்படத்தக்கதாகவும் இருக்க, அதில் இருக்கும் கழிவை அகற்றவேண்டும். “நீ வெள்ளியிலிருந்து கசடுகளையும் அசுத்தங்களையும் நீக்கிவிட்டால், அதைக்கொண்டு ஒரு தொழிலாளியால் நல்ல அழகான பொருட்களைச் செய்யமுடியும்” (நீதிமொழிகள் 25:4). தேவன் தம்முடைய பரிசுத்த ஜனங்களை உபயோகிக்க விரும்புகிறார். ஆனால், அதற்காக கழிவை போல் பாவமும் அகற்றப்பட வேண்டும். பாவங்களைத் தாமாக ஒப்புக்கொண்டு, மனந்திரும்பி, விட்டு விடுவது நன்மையானது. இல்லையெனில், தேவன் தம்முடைய பரிசுத்தப்படுத்தும் முகவர்களை அனுப்பலாம்; அது கடினமான சூழ்நிலைகள், நோய், வேதனை, தொல்லை, பொருளாதார சிக்கல்கள், உறவுகளின் முறிவுகள் போன்றவையாக இருக்கலாம். அந்தவேளைகளில் அவர்கள் தேவனை நாடி, ஒரு நல்ல தீர்வைப் பெற முடியும் மற்றும் பாவத்திலிருந்து விடுதலைப் பெற முடியும்.
பாவத்தை நான் ஒரு சேறு அல்லது கசடு என்று புரிந்துகொண்டு அதிலிருந்து விலகி இருக்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran