பைங்குறுநாரை (Butorides Virescens) வேட்டையாடுவதற்கு கருவிகளைப் பயன்படுத்தும் பறவைகளில் ஒன்றாகும். அவை பூச்சிகள், பழங்கள் மற்றும் ஒரு சிலநேரம் தூண்டில் மீன்களை இழுப்பதற்கு ரொட்டி ஆகியவற்றைப் பயன்படுத்தி பிடிப்பதும் உண்டு, அதை அவைகள் தங்களுக்கான ஓய்வு நேரத்தில் சாப்பிடுகின்றன. உணவு கிடைத்தவுடன் மீன்கள் நீந்தி மேற்பரப்பிற்கு வருவதுண்டு, இந்த மீன்கள் மேலே வருவதைப் பார்த்த பைங்குறுநாரைகள், காத்திருந்து அதற்கான நேரம் வந்ததும் அவற்றைப் பிடித்து உண்ணும். அதுதான் இப்படி ஒரு பழமொழி கூட உண்டே, ‘ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு’.
புத்திசாலி சாத்தான்:
சாத்தான் புத்திசாலி, ஞானவான், அவனுடைய அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டே இருக்கிறான். ஆம், ஏதேன் தோட்டத்தில் ஆதாம் மற்றும் ஏவாளை அவன் முதன்முதலில் ஏமாற்றியதில் இருந்து அவனுக்கு ஒரு நீண்ட அனுபவம் உள்ளது. அவன் பாம்பை ஏமாற்ற பயன்படுத்தியதால், கர்த்தராகிய ஆண்டவர் சீஷர்களை பாம்புகளைப் போல வினாவுள்ளவர்களாகவும், ஆனால் புறாக்களைப் போல கபடற்றவர்களாகவும் இருக்கக் கற்றுக் கொடுக்கிறார் (மத்தேயு 10:16).
புத்திசாலித்தனமான உத்திகள்:
கிரீன் ஹெரான் போல, சீஷர்களை ஏமாற்றவும் அழிக்கவும் சாத்தான் கவர்ச்சிகரமான கருவிகளைப் பயன்படுத்துகிறான். எளிதில் மற்றும் அளவுக்கதிகமாக கிடைக்கும் உணவைப் பார்க்கும் மீன்கள் இலவச உணவைப் பெறச் செல்கின்றன. அவ்வாறே, சாத்தான் அதிக செலவோ முயற்சியோ இல்லாமல் எளிதாக கிடைக்கும் பணம், எளிதாக கிடைக்கும் இன்பம், எளிதாக கிடைக்கும் சந்தோஷம் என அனைத்தையும் வழங்குகிறான். பகுத்தறிவற்ற சீஷர்கள் அற்ப சொற்ப சந்தோஷங்களைத் தேடிச் செல்லும்போது, அவர்கள் அழிக்கப்படுகிறார்கள். அதிக அடிப்படை முதலீட்டு வருமானத்தை வழங்கும் துணை வங்கிகள் உள்ளன, இதைப்பெற ஜனங்கள் அவசரப்பட்டு இறுதியில் அழிக்கப்படுகின்றனர்.
முட்டாள் மாடு:
நீதிமொழிகள் 7:22,23 ல் கூறப்படுகிறது போல, “அவன் அவள் பின்னே சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டு தண்டனைக்குப் போவதுபோலும், ஒரு குருவி தன் பிராணனை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத்தீவிரிக்கிறதுபோலும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவன் ஈரலைப் பிளந்தது”. ஆக, முடிவு மரணம். தங்களை இடறலடையச் செய்து, தேவனிடமிருந்து பிரித்து, அவருடைய நோக்கம் மற்றும் சித்தத்திலிருந்து அவர்களைப் பிரிக்கும் ஒரு சாத்தான் இருப்பதை உலகில் பலர் உணர்வதில்லை; இறுதியில் அவர்களை நித்திய மரணத்திற்கு கொண்டு போய் விட்டுவிடுகிறான். அப்பாவியான மனிதனாலும், அறிவில்லாத மனிதனாலும், அலட்சியமுள்ளவனாலும், மதியீனனாலும் சாத்தானின் தாக்குதலைத் தாங்க முடியாது, எதிர் கொள்ள முடியாது. தந்திரமாக, சாத்தான் பாவத்தை பாதிப்பில்லாததாகவும், எந்த விளைவும் இல்லாததாகவும், இன்பமாகவும் காட்டுகிறான். திருட்டுத் தண்ணீர் தித்திக்கும் என்று ஒரு கட்டுக்கதை வேறு (நீதிமொழிகள் 9:17). அதாவது, சட்டத்திற்குப் புறம்பான மற்றும் கள்ளத்தனமான விஷயங்கள் விரும்பத்தக்கவையாகிறது.
முட்டாள் ஆடு:
நம்பிக்கையற்றவர்கள் மாடு போன்றவர்கள் என்றால், விசுவாசிகள் எப்போதும் வழிதவறிச் செல்லும் ஆடுகளைப் போன்றவர்கள். ஆடு மேய்ப்பனைப் பின்தொடராமல், மற்ற ஆடுகளைப் பின்தொடரத் தொடங்கினால், பேரழிவு ஒரு ஆட்டுக்குக் காத்திருக்கிறது. பின்விளைவுகளை உணராமல், விசுவாசிகள் வழிதவறி பெரும் கிரயத்தைச் செலுத்துகின்றனர்.
சாத்தானின் உத்திகளைப் பற்றி நான் எச்சரிக்கையாக இருக்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran