ஒரு இளம், துடிப்புமிக்க மனிதன் உண்மையான பரம சத்தியம் என்ன? என்பதை அறிந்துகொள்ள விரும்பினான். அதற்காக இணையதளங்கள், செயலிகள் போன்றவற்றைத் தேடிப் பார்த்தான். முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் சில இடங்களுக்கும் சென்றான்; சில பிரபலங்களையும் சந்தித்தான். ஆனாலும், அவனுடைய உள்ளத்தில் வெறுமையும், தனிமையும், யாருமற்ற நிலையும் தொடர்ந்து காணப்பட்டன.
ஒருநாள், ஒரு காபி கடையில் யாரோ ஒருவர் பேசிக்கொண்டிருந்தபோது, அவன் காதில் இந்த வார்த்தைகள் விழுந்தன; “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்தேயு 11:28). அந்த வசனத்தை அவன் தேடிப் பார்த்தான். அதன் பின்னர், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தன் ஆண்டவராக ஏற்றுக்கொண்டு, அவருடைய சீஷனானான். தான் சத்தியத்தைத் தேடிய பயணத்தில் சந்தித்த அனுபவங்களையும், பயனற்றதும் பலனற்றதுமான பல மாற்று வழிகளை முயற்சித்ததையும் அவன் பகிர்ந்துகொண்டான்.
மந்திரம்:
ஒரு புதிய யுகக் குழு (New Age group) அவனுக்கு ஒரு மந்திரத்தைக் கற்றுக்கொடுத்தது. அது ஒரு இரகசிய உச்சரிப்பு என்றும், அந்தக் குழுவின் குருவுக்கு ஒரு கடவுள் கொடுத்ததாகவும், அதை உலகில் வேறு யாரும் அறிய முடியாது என்றும் அவர்கள் கூறினர். அதை தினமும் 30 நிமிடங்கள் தியான நிலையில் அமர்ந்து திரும்பத் திரும்ப உச்சரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். ஆனால், அவன் மேற்கொண்ட அந்தப் பயிற்சி எந்தப் பயனையும் அளிக்கவில்லை.
விதிமுறைகள்:
மற்றொரு குரு அவனுக்கு பல விதிமுறைகளைக் கொடுத்தார்.
மது அருந்தக்கூடாது; அசைவ உணவு உண்ணக்கூடாது; வெங்காயம் சாப்பிடக்கூடாது; பூண்டு சாப்பிடக்கூடாது என்பன போன்ற பல கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால் அவை அனைத்தும் வெறும் வெளிப்புற ஒழுக்கங்களும் நடைமுறைகளுமாகவே இருந்தன. அவை அவனுடைய சிந்தனையிலும், மனப்பான்மையிலும், நடத்தையிலும் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.
சடங்குகள்:
பின்னர், சமய நூல்களில் நன்கு அறிவும், தூய்மையான வாழ்க்கையும் கொண்ட ஒரு மதப் பெரியவரை அவன் அணுகினான்.
தானும் ஒரு குருவாக விரும்பிய அந்த நபர், அவனுக்கு பல்வேறு சடங்குகளைக் கற்றுக்கொடுத்தார். அவற்றை சந்தேகமின்றி, கவனமாகவும் தொடர்ந்து, விடாமுயற்சியுடனும் கடைப்பிடித்தால் சத்தியத்தை அறிந்துகொள்ள முடியும் என்று உறுதியளித்தார். ஆனால் அந்தச் சடங்குகள் அவனுடைய நேரத்தையும் பணத்தையும் அதிகமாக எடுத்துக்கொண்டனவே தவிர, அவனை சத்தியத்தின் இலக்கை நோக்கி அழைத்துச் செல்லவில்லை.
சூத்திரம்:
சில இணையதளங்கள் வாழ்க்கைக்கான பல்வேறு சூத்திரங்களை வழங்குகின்றன.
அவற்றில் பெரும்பாலானவை ஒரு கொடுக்கல்-வாங்கல் முறையைப் போன்றவை; “இதைச் செய்தால், அதற்கான பலன் கிடைக்கும்”.
ஆன்மீக வாழ்க்கைக்கான அந்தச் சமன்பாடுகள் சில நேரங்களில் வித்தியாசமாகவும், சில சமயங்களில் நகைப்புக்குரியதாகவும் இருந்தன.
ஆனாலும், சத்தியத்தைத் தீவிரமாகத் தேடிய அவன் அவற்றையும் முயற்சித்துப் பார்த்தான். இறுதியில் அவையும் தோல்வியடைந்தன.
தத்துவம்:
உலகின் தலைசிறந்த தத்துவஞானிகள் முன்வைத்துள்ள ஏராளமான தத்துவங்கள் இருக்கின்றன அல்லவா? அவன் செயற்கை நுண்ணறிவின் (AI) உதவியுடன் உலகின் பல்வேறு பகுதிகளில் தோன்றிய முக்கியமான தத்துவங்களின் சுருக்கங்களையும் அறிந்துகொண்டான். ஆனால் அவற்றில் எதுவும் அவனுடைய ஆன்மீகத் தாகத்தைத் தீர்க்கவில்லை. அவனுக்கு உண்மையான சேர்ந்திருப்பதற்கான உணர்வையும் கொடுக்கவில்லை.
தனிப்பட்ட உறவு:
இறுதியாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் மட்டுமே உண்மையான தனிப்பட்ட உறவையும் நித்திய ஜீவனையும் வழங்க முடியும் என்பதை அவன் கண்டறிந்தான். ஏனெனில் இயேசு கிறிஸ்து கூறினார்; “நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்”
(யோவான் 14:6). கிறிஸ்தவம் என்பது வெறும் மந்திரங்கள், விதிமுறைகள், சடங்குகள், சூத்திரங்கள் அல்லது தத்துவங்களின் தொகுப்பு அல்ல.
அது இயேசு கிறிஸ்துவோடு ஏற்படுத்திக்கொள்ளும் தனிப்பட்ட உறவு ஆகும்.
அவர் நமது இரட்சகர்.
அவர் நமது ஆண்டவர்.
அவர் நமது வழி.
அவர் சத்தியம்.
அவர் ஜீவன்.
“நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உண்மையாக அறிந்திருக்கிறேனா?
அவரோடு தனிப்பட்ட உறவில் வாழ்கிறேனா?
நான் அவருக்குச் சொந்தமான நபரா?”
Rev. Dr. J.N. Manokaran