1. ராஜ்யத்தைப் பலப்படுத்துகிறவர் 2நாளாகமம் 1:1 தாவீதின் குமாரனாகிய சாலொமோன் தன் ராஜ்யத்திலே பலப்பட்டான்; அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனுடனே இருந்து அவனை மிகவும் பெரியவனாக்கினார். 2நாளாகமம் 20:6 தேவரீர் ராஜ்யங்களை ஆளுகிறவர் எரேமியா 1:10 எரேமியாவை ராஜ்யங்களின்மேல் ஏற்படுத்தி எபிரெயர் 11:33விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள்
2. ஊழியத்தைப் பலப்படுத்துகிறவர் 2தீமோத்தேயு 4:17 கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேற்றுவதற்காகவும், புறஜாதியாரெல்லாரும் கேட்கிறதற் காகவும், என்னைப் பலப்படுத்தினார். 2கொரிந்தியர் 12:9 பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் 2தீமோத்தேயு 1:7 தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்