தன் வீட்டிற்கு அருகாமையில் சபைக் கட்டுவதற்கு ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் கிறிஸ்தவ சமூகம் கொஞ்சம் தூரம் சென்று சபையைக் கட்டி முடித்து ஆராதனையைத் தொடங்கியது. ஆனால், அந்த மனிதனின் மனைவி ஊமையாகி, பேச முடியாமல் போனாள். அவர் மீண்டும் சென்று கிறிஸ்தவர்களை நோக்கி கத்தினார், ஏனெனில் அவர்கள் தனது குடும்பத்தை சபித்தார்கள் எனவும், அதனால் தனது மனைவி ஊமையாகிவிட்டார் என்பதாகவும் கூறினார். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அவர் பயந்து போனார், ஆத்திரமடைந்தார், அதிருப்தி அடைந்தார், ஆனால் தன்னை தாழ்த்திக் கொண்டு மனந்திரும்புவதற்கு அவர் தயாராக இல்லை. பலரும் இப்படிதான் தேவனின் செயல் என அறிந்தும் அதற்கு தன்னை தாழ்த்தாமல் எதிர்மறையாக நடந்துகொள்கிறார்கள்.
அதிருப்தி:
நெகேமியா எருசலேமின் சுவரைக் கட்ட வந்தபோது, மிகவும் வருத்தப்பட்ட அல்லது அதிருப்தி அடைந்த சிலர் அங்கு இருந்தனர் (நெகேமியா 2:10). ஓரோனியனான சன்பல்லத்தும், அம்மோனியனான தொபியாவும், யூதர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதைக் கண்டு வருத்தமடைந்தனர்.
கோபமும் ஆத்திரமும்:
சன்பல்லாத்தும் தொபியாவும் சுவர் கட்டப்படுவதைக் கேள்விப்பட்டபோது அவர்கள் கோபமும் ஆத்திரமும் அடைந்தனர் (நெகேமியா 4:1). அவர்கள் நெகேமியா மீதும், அவருடைய தலைமையின் மீதும், மக்களைத் திரட்டியதன் மீதும், அவருடைய சாதனைகள் மீதும் கோபமடைந்தனர்.
தைரியத்தின் வீழ்ச்சி:
எருசலேம் சுவர் கட்டி முடிக்கப்பட்டது, அது தேவனின் செயல் என்று தேசங்களை சிந்திக்கவும் புரிந்துகொள்ளவும் செய்தது. எனவே, எதிரிகள் பயந்தனர் மற்றும் தைரியத்தையும் தன்னம்பிக்கையும் இழந்தனர். “எருசலேம் சுவர் எலூல் மாதத்தின் 25வது நாளன்று கட்டி முடிக்கப்பட்டது. சுவரைக் கட்டிமுடிக்க 52 நாட்கள் ஆயிற்று. பிறகு எங்களது பகைவர்கள் எல்லாம் சுவர் கட்டி முடிக்கப்பட்டது என்பதைக் கேள்விப்பட்டனர். எங்களைச் சுற்றிலும் உள்ள நாட்டினர் சுவர் கட்டி முடிந்துவிட்டது என்பதைப் பார்த்தனர். எனவே அவர்கள் தமது தைரியத்தை இழந்தனர். ஏனென்றால் இவ்வேலை எங்கள் தேவனுடைய உதவியால் செய்யப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டனர்” (நெகேமியா 6:15-16). தீய ஜனங்கள் காற்றில் பறக்கிற உமியைப் போன்றவர்கள் (சங்கீதம் 1:4) என்று வேதாகமம் கூறுகிறது.
தேவனின் விரல்:
மோசே செய்த அற்புதங்களைப் பின்பற்றி தங்கள் மந்திர சக்தியைப் பயன்படுத்திய மந்திரவாதிகள், தோல்வியை ஏற்றுக்கொண்டு, அது ‘தேவனின் விரல்’ என்று அறிவித்தார்கள் (யாத்திராகமம் 8:19). எனினும், பார்வோன் தன் இருதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டான், மனந்திரும்ப விரும்பவில்லை. அவனது பெருமை உண்மையை ஒப்புக்கொள்ள விடாமல் தடுத்தது.
எதிரிகள் சமாதானம்:
ஒரு மனிதனின் வாழ்க்கை தேவனுக்குப் பிரியமாக இருக்கும்போது, அவனுடைய எதிரிகளையும் அவனுடன் சமாதானமாக இருக்கும்படி கட்டளையிடுகிறார் (நீதிமொழிகள் 16:7). அது என்னவென்றால், தேவனுக்கு எதிராகப் போராடுவது வீண் என்பதை உணர்ந்ததவர்கள், தேவ ஜனங்களோடே சமாதானமாக போகிறார்கள்.
வீண் நம்பிக்கை:
தேவ பிள்ளைகளுக்கு எதிராக போராடும் மக்கள் வீண் நம்பிக்கை கொண்டவர்கள். ஆம், அவருடைய மக்களில் இருப்பவர் உலகத்து மக்களில் இருப்பவனைக் காட்டிலும் பெரியவர் (1 யோவான் 4:4).
தேவனின் உதவியால் நான் உலகத்தை ஜெயிப்பேன் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளதா?
வாடகைக்கு மனைவி கிடைக்கும் சந்தை!?
Rev. Dr. J.N. Manokaran