2. கெட்டுப்போனதைத் தேடிவந்தவர் மத்தேயு 18:11,12 (11-14) மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார். மத்தேயு 18:14 சிறியரில் ஒருவனாகிலும், கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல யோவான் 3:16 தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக் கிறவன் எவனோ, அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும் படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். யோவான் 10:28 அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் என் கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதுமில்லை.
3. இழந்துபோனதைத் தேடிவந்தவர் லூக்கா 19:10 (1-10) இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார். யோவான் 6:39(37-40) அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது. மத்தேயு 16:25;மாற்கு 8:35; லூக்கா 17:33 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான்.