மகேஷ் குஜார் தனது மகள் தனுவை, அவரது திருமணத்திற்கு சில நாள்கள் முன், போலீசும், பஞ்சாயத்தும் உள்ளிருந்தபோது சுட்டுக்கொன்றார். குடும்பம் ஏற்பாடு செய்த திருமணத்திற்கு எதிராக, வேறு சாதியிலுள்ள தனது விருப்பத்தின் ஆணை திருமணம் செய்ய வேண்டும் எனத் தனுவ் வெளிப்படையாகக் கூறியிருந்தார் (15 ஜனவரி 2025).
அதிகாரத்தின் மீதான வெறி:
குழந்தைகள் தேவனிடமிருந்து வந்த அருமையான பரிசுகள் (சங்கீதம் 127:3). ஆனால் பல பெற்றோர்கள், கருப்பையில் இருந்தாலும் வெளியிலிருந்தாலும், சிறாராக இருந்தாலும் பெரியவராக இருந்தாலும், குழந்தைகளின் மீது முழுமையான அதிகாரம் தங்களுக்கே இருப்பதாக நினைக்கிறார்கள். குழந்தைகள் கடவுளுக்கே சொந்தமானவர்கள்; பெற்றோர்கள் குழந்தைகளுக்கான கடவுள் அல்ல. வளர்ந்த குழந்தைகளின் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளையும் கட்டுப்படுத்த முயலும்போது, பெற்றோர்கள் கடவுளைப் போல நடந்துகொள்கிறார்கள்.
கௌரவம்:
சிலர் தாங்கள் பிறந்த சாதியைப் பற்றிப் பெருமைப்படுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, சாதி அமைப்பின் அடிப்படையில் தங்களைவிட கீழானவர்கள் எப்போதும் இருக்கிறார்கள். அதனால், பிற சாதியினருடன் பழகுவது தங்களது மரியாதைக்கும் பெருமைக்கும் பாதிப்பாகும் மற்றும் கெளரவ குறைச்சல் என்று நம்புகிறார்கள்.
வெறுப்பு மற்றும் அவமதிப்பு:
துரதிருஷ்டவசமாக, வெவ்வேறு சாதிகளுக்கிடையிலான உறவுகள் விரோதம், வெறுப்பு மற்றும் அவமதிப்பால் நிரம்பியிருக்கின்றன. சாதியின் நிலை மிகக் குறைந்தால் குறைவாக இருக்கிறவர்களுக்கு அதிகமான அவமதிப்பும் காட்டப்படுகிறது. பிற சாதியினரை சிலர் மிருகங்களுடன் கூட ஒப்பிடுகிறார்கள்.
பெண்களுக்கு வேறு வழியில்லை:
பெற்றோர்கள், தங்கள் மகள்களால் சரியான தேர்வு செய்ய முடியாது; எனவே அவர்கள் தேர்வு செய்கிறதை ஏற்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். பெண்கள் குறைந்த அறிவுடையவர்களாகக் கருதப்படுகிறார்கள், சில நேரங்களில் பசுமாடுகளுடன் ஒப்பிடப்படுகிறார்கள். ஆனால் ரெபெக்கா ஈசாக்கின் மனைவியாக மாறும் முன், தன்னுடைய சம்மதத்தைத் தெரிவிக்க வேண்டியது அவசியமாக இருந்தது (ஆதியாகமம் 24:58).
பெருமைமிக்க கொலைகாரன்:
அந்த மனிதரன் தன் மகளிடம் கொடூரமாக நடந்துகொண்டார். ஒரு தந்தையிற்கே உரிய இயல்பான அன்பும் அவர் இல்லாதவராக இருந்தார். முதலில், மகளுக்கு எந்த உரிமையும் இல்லை.
இரண்டாவது, சாதியுடன் கூடிய பற்றுதல் மகளின் உயிரைவிட மேலானது. மூன்றாவது, சாதி விதிகளை மீறல் மற்றும் தந்தைக்கு கீழ்படியாமை மரண தண்டனைக்கு ஒப்பானது. நான்காவது, நாட்டின் சட்டம், பஞ்சாயத்து அல்லது அருகில் இருந்த போலீசாரை அவர் மதிக்கவில்லை. ஐந்தாவது, அவர் சட்டப்படி வைத்திருக்கக்கூடாத துப்பாக்கியை வைத்திருந்தார். ஆறாவது, நயவஞ்சகனாக தன் மகளிடம் அன்பு காட்டினது போல நடித்து, தனியாக அழைத்து சென்று, பேசுவதைப்போல் நடித்துக்கொண்டு கொலை செய்தான். ஏழாவது, தனது மகள் சுதந்திரமாக சிந்தித்தவளாக இருப்பதை ஏற்க முடியாமல், பெருமை கொண்ட கொலைகாரனாகவே இருக்க விரும்பினார், அன்பான தந்தையாக அல்ல.
நான் எல்லா மனிதர்களையும் சமமாகவும் ஆதாம் மற்றும் ஏவாளின் சந்ததியினராகவும் கருதுகிறேனா?
Rev. Dr. J.N. Manokaran