1. தேற்றுவதற்கு கர்த்தர் இருக்கிறார் பிரசங்கி 4:1; புலம்பல் 1:2,9,17,21 ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர்களைத் தேற்றுவாரில்லை. ஏசாயா 66:13 தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன். சங்கீதம் 94:19 உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது 2. விசாரிப்பதற்கு கர்த்தர் இருக்கிறார் சங்கீதம் 142:4; எசேக்கியேல் 34:6 விசாரிப்பார் ஒருவருமில்லை 1பேதுரு 5:7 அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலை களையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். சங்கீதம் 68:5; 3. பரிதபிப்பதற்கு கர்த்தர் இருக்கிறார் சங்கீதம் 69:20 பரிதபிக்கிறவன் ஒருவனும் இல்லை சங்கீதம் 135:14; உபாகமம் 32:26 ஊழியக்காரர்மேல் பரிதாபப்படுவார். மத்தேயு 15:32 இயேசு: ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன் (5 அப்பம் 2 மீன்) 4. நன்மைசெய்வதற்கு கர்த்தர் இருக்கிறார் சங்கீதம் 14:3; சங்கீதம் 53:1; ரோமர் 3:12 நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை, ஒருவனாகிலும் இல்லை. அப்போஸ்தலர் 10:38 நன்மைசெய்கிறவராய் சுற்றித்திரிந்தார் லூக்கா 6:35 அவர் நன்றியறியாதவர்களுக்கும் நன்மை செய்கிறாரே 5. பரிந்துபேசுவதற்கு கர்த்தர் இருக்கிறார் எசேக்கியேல் 22:30 தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும்... ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன். 1யோவான் 2:1 இயேசுகிறிஸ்து நமக்காக பிதாவினிடத்தில் பரிந்துபேசு... லூக்கா 23:34 இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும் 6. துணை செய்வதற்கு கர்த்தர் இருக்கிறார் ஏசாயா 63:5 துணை செய்வார் ஒருவனும் இல்லை; ஏசாயா 50:7,9 கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார் சங்கீதம் 46:1 ஆபத்துகாலத்தில் அனுகூலமான துணையுமானவர் சங்கீதம் 70:5; 115:10-11; 2தீமோத்தேயு 4:17; ஏசாயா 41:13-14; 7. விண்ணப்பம்பண்ணுவதற்கு கர்த்தர் இருக்கிறார் ஏசாயா 59:16 ஒருவனும் விண்ணப்பம்பண்ணுகிறவன் இல்லை ரோமர் 8:34 நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே யோவான் 17:1,9,15,20 இயேசுகிறிஸ்து நமக்காக விண்ணப்பம்பண்ணுகிறார் Author: Rev. M. Arul Doss