1. உங்கள் உள்ளே இருப்பவர் பெரியவர் 1யோவான் 4:4 பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். உபாகமம் 7:21 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன்.
2. உங்கள் நடுவே இருப்பவர் பெரியவர் ஏசாயா 12:6 சீயோனில் வாசமாயிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார். செப்பனியா 3:17 உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார் அவர் வல்லமையுள்ளவர் சகரியா 2:5,10 நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன்