கொடுப்பதின் மீள் எழுச்சி நிலை

இடைக்கால திருச்சபைகள், புத்தாண்டு ஆராதனையின்போது காணிக்கை வழங்குவதற்கான, ஒரு சிறப்பு சந்தர்ப்பம் இருந்தது.   சபையின் காணிக்கைகளில் தேவன் மகிழ்ச்சியடையும் போது தேவாலய மணி அடிக்கும் என்று அவர்கள் நம்பினர்.  தேவாலய மணியின் கப்பிகளில் ஒரு பெரிய உண்டியல் கூடை இணைக்கப்பட்டிருந்தது.  காணிக்கையை ஒவ்வொருவராகப் போட்டுவிட்டு மணி அடிக்கும் வரை மக்கள் காத்திருந்தனர்.  ஒரு நாள், ஒரு சிறிய ஏழைப் பையனைத் தவிர அனைவரும் தங்களால் இயன்றதை வழங்கினர்.  மணி அடிக்காததால், அனைவரும் சோகமடைந்தனர், சிறுவனின் காணிக்கை  மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்த பையன் மெதுவாக வந்து வைக்கோல் பையை கீழே போட்டான், மணி அடித்தது. சபையாருக்கு ஆச்சரியம் ஆனால் நிம்மதியடைந்தனர், இருப்பினும் வைக்கோல் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் குழப்பம் ஏற்பட்டது. தேவனுக்கு சிறியதோ பெரியதோ முக்கியமில்லை.   இறையாண்மையுள்ள தேவனால் எவ்வித காணிக்கைகளோ அல்லது பரிசுகளோ இல்லாமல் எதையும் செய்ய முடியும், ஆனாலும் உலகில் தனது பங்காளிகளாக மனிதர்களை வைத்திருக்க விரும்புகிறார். மலைப் பிரசங்கக் கூட்டத்தில் அந்தச் சிறுவன் தன் மதிய உணவான ஐந்து ரொட்டிகளையும் இரண்டு மீன்களையும் தங்களுடன் வந்த ஐயாயிரம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உணவளிக்கக் கொடுத்தான் அல்லவா (யோவான் 6:1-14).

அற்பம்:  
மனித தரத்தின்படி, சிறுவனின் மதிய உணவு பெரும் கூட்டத்திற்கு அற்பமானதாக இருந்திருக்கலாம்.   ஒருவேளை, மாபெரும் கூட்டத்தையோ அல்லது கட்டமைப்புகள் மற்றும் வளங்களைத் திரட்ட வேண்டியதன் அவசியத்தையோ அவன் புரிந்து கொள்ளவில்லை. 

போதாமை:  
சீஷர்கள் சந்தேகமடைந்து; ஐந்து ரொட்டிகளை எவ்வளவு பேருக்கு கொடுக்க முடியும் என்றுக் கேட்டனர்.  ரொட்டிகளை சிறு சிறு துண்டுகளாக கொடுத்தாலும், எல்லாருக்கும் கிடைக்காதே மற்றும் பலருக்கு போதுமானதாக இருக்காதே என்று அவர்கள் குழப்பமடைந்தனர்.

சாத்தியமற்றது:  
கூட்டத்திற்கு உணவளிப்பது சாத்தியமில்லை என்று சீஷர்கள் உணர்ந்தனர். அவர்கள் தேவனின் விருப்பத்தையோ, அவருடைய வல்லமையையோ புரிந்து கொள்ளவில்லை. சிறு பையனுக்கும் புரியவில்லை ஆனால் குழந்தையைப் போன்றதான ஒரு விசுவாசம் இருந்தது. 

முதலீடு:  
சிறுவன் அறியாமல் தேவ ராஜ்யத்தில் முதலீடு செய்து கர்த்தராகிய இயேசுவிடம் கொடுத்தான்.   சீஷர்களுக்கோ கூட்டத்திற்கோ கொடுக்கிறோம் என்று எண்ணவில்லை. அதை தேவனுக்கு கொடுப்பதே அவனது கவனமும் விருப்பமுமாக இருந்தது. அதாவது, அவர் நேர்த்தியாக எதையும் செய்வார் என்ற விசுவாசம்.  அது தேவையைக் கண்டு கொடுக்கப்படவில்லை, அது சிறுவனுக்குப் புரியவில்லை, ஆனால் கொடுப்பது தேவனுக்கு என்று மட்டும் புரிந்தது. 

நான் எப்பொழுதும் கர்த்தருக்கு கொடுக்கிற நபராக இருக்கிறேனா? 

Rev. Dr. J.N. Manokaran