யூத தேசத்தைப் போலவே, இன்றும் பலர் இயேசுவை நிராகரிக்கிறார்கள்.
அவரது பிறப்பு:
அவரது தோற்றமும் பிறப்பும் மக்களால் ஏற்கப்படவில்லை (யோவான் 7:52). கன்னிகையிடமிருந்து மீட்பர் பிறக்க வேண்டும் என்ற தேவனுடைய திட்டத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை (ஏசாயா 7:14). அவ்வாறு பிறந்தால்தான், அவர் முழுமையாகவே (100%) தேவனின் குமாரனும், முழுமையாகவே (100%) மனிதனுமான ஒரு பரிபூரண மீட்பராக இருக்க முடியும்.
கல்வி:
யூத மதத் தலைவர்கள், இயேசுவானவர் ஆலோசனை சங்கத்தால் அங்கீகரித்த போதகரிடம் கல்வி பெறாதவர் என இகழ்ந்தனர் (யோவான் 7:52). ஒரு பேராசிரியரிடம் அவரது வாகன ஓட்டுநர் எளிய சுவிசேஷத்தைப் பகிர்ந்தபோது, “நீ எனக்கு கற்றுத்தருகிறாயா? நீ கல்வியில்லாதவன்!” என்று அவமதித்தார். அவருக்கு ஞானம் கல்வியால் வரும் என நினைப்பு. ஆனால் தேவன், ஞானிகளை வெட்கப்படுத்த மூடர்களைத் தேர்ந்தெடுக்கிறார் (1 கொரிந்தியர் 1:27).
பாரம்பரியங்களை நிராகரித்தல்:
யூதர்களிடையே நிலவிய அனைத்து பாரம்பரியங்களையும் தேவன் பின்பற்றவில்லை (லூக்கா 6:2). பல பண்பாட்டுகளில் மூதாதையர்களின் பாரம்பரியங்கள் புனிதமானவை எனக் கருதப்படுகின்றன. ஆனால் சில பாரம்பரியங்கள் அடக்குமுறையிலும், தேவபக்தியற்றும், நன்மை தராதவையாகவும் உள்ளன. இருப்பினும், அவை மனிதர்களைக் காட்டிலும் பாரம்பரியங்களை உயர்த்தி, அவர்களின் வாழ்வாதாரம், கனவுகள், நம்பிக்கைகளை அழிக்கின்றன.
பாவிகளின் நண்பன்:
சாதாரண மக்கள், பாவிகள், வரி வசூலிப்பவர்கள், விபச்சாரக்காரர்கள் போன்ற அனைவரையும் ஏற்றுக்கொண்டதால், கர்த்தராகிய இயேசுவை குற்றம் சாட்டினார்கள் (மத்தேயு 9:11). பல மதங்களில் சாதாரண மக்களுக்கு ஆன்மீக வாழ்க்கை சாத்தியமில்லை என மறுக்கப்படுகின்றது. சில மதங்களில் பாவிகள் கொல்லப்பட வேண்டும் என்றும், தர்மத்தை நிலைநாட்ட தெய்வங்கள் அவதாரமாக வருவார்கள் என்றும் நம்பப்படுகின்றது. வரி வசூலிப்பவர்கள் ரோமப் பேரரசுக்காக வேலை செய்வதால், வஞ்சகர்கள் என்றும் வெளிநாட்டவர்களாகவும் யூதர்களால் கருதப்பட்டனர். இன்று சிலர் இயேசுவை வெளிநாட்டு கலாச்சாரத்திலிருந்து வந்தவரென நிராகரிக்கிறார்கள். யூத மூப்பர்கள் விபச்சாரத்தில் பிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை மட்டும் இழுத்துவந்து குற்றம் சாட்டினர்; ஆணை விட்டுவிட்டார்கள். பல கலாச்சாரங்களைப் போலவே, அவர்கள் சட்டம் பெண்களுக்கு மட்டுமே பொருந்தும் என்ற தவறான எண்ணத்தில் இருந்தனர்.
தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்:
கட்டடக்காரர்களால் நிராகரிக்கப்பட்ட கல், தேவனால் மூலைக்கல்லாக அல்லது தலைக்கல்லாக நியமிக்கப்பட்டது (சங்கீதம் 118:22). இரட்சிப்புக்கு ஒரே வழி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலம் மட்டுமே உள்ளது.
நான் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை நிராகரித்துள்ளேனா? அல்லது அவரை மூலைக்கல்லாக ஏற்றுக்கொண்டுள்ளேனா?
Rev. Dr. J.N. Manokaran