தீமையின் மீது நாட்டம் கொண்டவர்கள்

புவியீர்ப்பு விசை எல்லாவற்றையும் பூமியின் பக்கம் இழுக்கும் போல, பாவமும் மனிதரைத் தன்னிடமே இழுக்கிறது. எனவே, எல்லா மனிதரும் புவியீர்ப்பை உணர்ந்து கொள்ளாமல் வாழ்வது போல, பாவத்தில் வாழ்வதும் சாதாரணமாகவும் பொதுவாகவும் இருக்கிறது. தன் இருதயம் பொல்லாப்பிற்கு சாய்ந்து விடாதபடி, தீயவர்களின் வஞ்சகச் செயல்களில் தன்னைச் சேர்ந்துகொள்ளாமல் காத்தருளும்படி தாவீது கர்த்தரிடம் ஜெபிக்கிறான் (சங்கீதம் 141:3-4).

வாய் காக்கும் ஜெபம்:
தன் வாயைக் காக்கத் தாவீது விரும்புகிறான். படைப்பாளியான தேவன் உண்டாக்கிய வாயின் கதவுகள் உதடுகள். அவற்றின் வாயிலாக வார்த்தைகள் வெளிப்படுகின்றன. அந்த வாயின் கதவுகளை கர்த்தர் காக்கும்படி தாவீது வேண்டுகிறான்; அதனால், தேவனை மதிக்கும், நம்பிக்கையான, உண்மையுள்ள, விசுவாசமான வார்த்தைகள் வரக்கூடும். அதற்கு பதிலாக, எதிர்மறையான, அவமதிக்கும், தீங்கு விளைவிக்கும் வார்த்தைகள் வரக் கூடாது. குற்றச்சாட்டு, முணுமுணுத்தல், கசப்பு, நன்றியின்மையின் வெளிப்பாடு ஆகியவை அங்கே இருக்கக் கூடாது.

சுவைமிகுந்த விருந்து (Delicacies):
தீயவர்கள் தங்கள் கண்ணியாக சுவைமிகுந்த உணவுகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்த தாவீது, அவற்றைத் தவிர்த்துவிடுவதாகச் சொல்கிறான். உலகின் பல இடங்களில், பசித்தவர்களுக்கு உணவு கொடுப்பதன் மூலம் சட்டவிரோத செயல்களுக்கு இழுக்கிறார்கள். உணவு உள்ளவர்களுக்கோ, சுவைமிகுந்த விருந்து ஆசைக்குரிய உணவாக அளிக்கப்படுகிறது. அதோடு மது பானங்கள், போதைப்பொருட்களும் இணைக்கப்படலாம். ஆம், அவை ஆவிக்குரிய ஆரோக்கியத்திற்கு ஆபத்தான விருந்துகள்; நரகத்திற்கே வழி திறக்கும் கதவுகளாகும்.

தீய கூட்டணி (Evil Company):
ஆசீர்வதிக்கப்பட்டவன் தேவனைப் பயப்படாத கேலி செய்பவர்கள், இகழ்வர்கள், பரிகாசம் செய்பவர்கள் ஆகியோரின் நடுவில் அமரமாட்டான் (சங்கீதம் 1:1-3). ஏனெனில், அவர்கள் துன்மார்க்க மனப்பான்மையால் தேவனை, அவருடைய வார்த்தையையும், அவர் தாசர்களையும் இகழ்கிறார்கள். ஒரு மனிதனின் குணாதிசயத்தை கெடுக்கும் தீய நட்புகளைப் பற்றி பவுலும் எச்சரிக்கிறார் (1 கொரிந்தியர் 15:33). அப்படிப்பட்ட கூட்டத்தில் இருந்தால், தேவனுடைய வார்த்தை மறக்கப்படுகிறது; அதற்கு பதிலாக, தீய காரியங்களில் ஈடுபடத் தூண்டும் போலியான தைரியம் ஊட்டப்படுகிறது. சமுதாயத்தில் பதவி, மரியாதை பெற்றிருந்தாலும், தீயவர்கள் எளிமையானவர்களை சட்டவிரோத செயல்களில் ஈடுபடத் தூண்டுகிறார்கள்.

துன்மார்க்க செயல்களில் மும்முரமாக இருப்பவர்கள் (Busy with wicked deeds): 
அவர்கள் சோம்பேறிகள் அல்ல, மாறாக எப்போதும் பிஸியாக இருக்கிறார்கள் என்று தாவீது குறிப்பிடுகிறான். அவர்கள் பொல்லாப்பைத் தங்கள் வாழ்க்கை முறையாகக் கொள்கிறார்கள்; அகம்பாவத்தை தங்கள் சங்கிலியாக அணிகிறார்கள்; கொடுமையைத் தங்கள் உடையாக உடுத்துகிறார்கள்; தீமையைத் தங்கள் பார்வையாகக் கொண்டிருக்கிறார்கள்; அத்தகைய அநீதியான இலக்குகளைச் சிறப்பாகவும் தீவிரமாகவும் தொடர்ந்து சாதிக்க முயல்கிறார்கள் (சங்கீதம் 73:6). தாவீது போல், விசுவாசிகள் அனைவரும் அப்படிப்பட்ட தீய செயல்களில் மும்முரமாக இருப்பவர்களைத் தவிர்க்க வேண்டும். தீயவர்கள் தங்கள் பொல்லாப்பில் தொடர்ந்து செல்லட்டும்; ஆனால் கர்த்தர் திரும்பி வந்து ஒவ்வொருவருக்கும் அவர்களின் கிரியைகளுக்கேற்ப பலனளிப்பார் (வெளிப்படுத்துதல் 22:11-12).

நான் தேவனை நோக்கியும், பரிசுத்தத்தையும், நீதியையும் நோக்கியும் சாய்ந்திருக்கிறேனா?

Rev. Dr. J.N. Manokaran