உலகத்தில் பல ஜனநாயக நாடுகளில் குற்றவாளிகள், சட்டத்தை மீறுவோர் மற்றும் ஊழல்வாதிகள் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இளம் எலிகூ ஒரு பொருத்தமான கேள்வியை எழுப்பினார்; “நீதியை வெறுப்பவன் ஆட்சி செய்ய முடியுமா?” (யோபு 34:17). இது இன்று பல நிறுவனங்கள் மற்றும் அரசுகளுக்கே கேட்கத்தக்க பொருத்தமான கேள்வியாக இருக்கிறது. துரதிருஷ்டவசமாக, கிறிஸ்தவ அமைப்புகள், உள்ளூர் சபைகள், சில பிரிவுகள் கூட தெய்வீக தலைமையின் நெருக்கடியை எதிர்கொள்கின்றன. தேவனுடைய பரிசுத்தம், நீதி, நியாயம் ஆகியவற்றை அறியாமையும் மதிக்காத தன்மையும் திறமையற்ற, அதிகாரவாத, ஏகாதிபத்திய ஆட்சி முறைகளுக்கு வழிவகுக்கின்றன.
நீதி என்பது எட்டியைப் போலவா?
நீதியை வெறுப்பவர்கள் ஆட்சி செய்யும்போது, அவர்கள் மக்களுக்குத் தருவது தங்களின் கசப்பான நீதி மட்டுமே (ஆமோஸ் 5:7). அவர்கள் வழங்கிய நீதி கசப்பானது, உயிரைக் கொல்லக்கூடியது, தீங்கானது. நீதியை நேசிக்காமல், அதை வெறுத்ததினால், தேவனுடைய உயர்ந்த தராதரங்களின்படி ஆட்சி செய்வதற்கான தகுதியை இழந்துவிட்டனர். துரதிருஷ்டவசமாக, சமத்துவம், சுதந்திரம், நீதி, விடுதலை ஆகியவற்றை வெறுக்கும் தலைவர்களால் பல தேசங்கள் சுமையாக உள்ளன. அதோடு, பல மதங்களும் மக்களின் நீதி பெறும் உரிமைகளைப் பறித்து, தங்கள் தலைவர்களை தெய்வீக ஆட்சியாளர்களாக ஆக்குகின்றன.
நீதியை மறுக்கும் கலாச்சாரம்:
பல நாடுகளில் நிலவும் மரியாதை மற்றும் அவமானம் சார்ந்த கலாச்சார நடைமுறைகள் மக்களை நீதியிலிருந்து விலக்குகின்றன. சத்தியமும் நீதியும் அவர்களின் சிந்தனைகளிலும் செயல்களிலும் இருந்து முற்றிலும் நீக்கப்பட்டுவிடுகின்றன. வெளிப்புற கண்ணியம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது; ஆகையால் அவர்கள் உள்ளார்ந்த நெறி சிதைவுடன், வெளியில் அழகுபடுத்தப்பட்ட கல்லறைகள் போலவே இருக்கின்றனர்.
நீதி உயர்த்துகிறது:
“நீதி ஒரு ஜனத்தை உயர்த்துகிறது” (நீதிமொழிகள் 14:34). சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம், நீதி ஆகியவை நிலைநிறுத்தப்படும் போது அந்த தேசம் நீதியில் சிறப்பாக விளங்கும். ஒரு சீஷனுக்குப் பொருத்தமாக, தேவனுடைய ராஜ்யமும் நீதியின் மதிப்புகளும் வாழ்வில் முதன்மையான முன்னுரிமைகள் ஆகும் (மத்தேயு 6:33).
நீதியான அதிகாரத்தை இழத்தல்:
ஒரு ஆட்சியாளர் தேவனையும் அவரது நியாயப்பிரமாணத்தையும் மதிக்காமல் ஆட்சி செய்தால், மக்கள் அந்த ஆட்சியாளரை மதிக்க மாட்டார்கள். தலைவர்கள் மக்களை வழிநடத்தவும், முன்னின்று நடத்தவும், பொறுப்பேற்க வைக்கவும் தேவையான தார்மீக அதிகாரத்தை இழந்து விடுவர். இதனால் அவமதிப்பு, கீழ்ப்படையாமை, கலகம் ஆகியவை தோன்றி, குழப்பமும் அராஜகத்தையும் உருவாக்கும்.
நீதியான நியாயத்தீர்ப்பை வெறுத்தல்:
எலிகூ பயன்படுத்திய “நீதி” என்ற சொல் “நியாயத்தீர்ப்பு” என்பதையும் குறிக்கிறது. பாவிகள், குற்றவாளிகள், துன்மார்க்கர்கள், பொல்லாதவர்கள் அனைவரும் நியாயத்தீர்ப்பை வெறுக்கிறார்கள். தேவனுடைய நியாயத்தீர்ப்பு அவர்கள் மீது வரும் போது, “ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுவது பயங்கரமானது” (எபிரெயர் 10:31). தமது நியாயத்தீர்ப்புகளில் தேவன் சார்பில்லாதவர் அதாவது பாரபட்சம் காட்ட மாட்டார். ஆனால் துன்மார்க்கர்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்புகளை வெறுக்கிறார்கள்.
நான் நீதியையும் நியாயத்தையும் நேசிக்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran