உலகத்தின் பெரும்பாலான பகுதிகளில், ஏழைகள் தங்கள் குடியிருப்புகளுக்காக மண் சுவர்கள் கட்டுகிறார்கள். அவர்கள் கட்டிடப் பொருட்களை வாங்க முடியாதவர்களாக உள்ளனர். மேலும் அவர்கள் புயல், மழை, வெள்ளம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர். எசேக்கியேல், புயலும் கல்மழையும் வந்தபோது இடிந்து விழும் சுவர்களைக் கட்டும் நபர்களைப் போலிருக்கும் கள்ளத்த்தீர்க்கதரிசிகள் குறித்து எழுதுகிறார் (எசேக்கியேல் 13:10-12).
கள்ளத்த்தீர்க்கதரிசிகள்:
கள்ளத்தீர்க்கதரிசிகள் மக்களுக்குச் சமாதானத்தையும் நம்பிக்கையையும் கூறி வருகிறார்கள்; ஆனால் தேவன் இஸ்ரவேலரை பாபிலோனியரின் கைகளில் ஒப்படைத்து தண்டிக்க முடிவு செய்திருந்தார். இந்தப் பொய்த்தீர்க்கதரிசிகள் பாவத்தின் விளைவுகளையும் தேவனின் நீதிநியாயத் தீர்ப்புகளையும் தாழ்த்திக் காட்டி, தேவனின் பரிசுத்தத்தைக் கேலி செய்தனர். இஸ்ரவேலரை மனந்திரும்பச் சொல்ல வேண்டிய இடத்தில், தேவனின் தயவை வாக்குறுதி அளித்தனர். அவர்களுக்கு தேவனிடமிருந்து எந்தச் செய்தியும் இல்லை; ஆனால் தங்கள் சொந்தக் கருத்துகளைத் தேவனின் செய்தியாகக் கூறி ஏமாற்றினர். இன்றும் பல கள்ளத்தீர்க்கதரிசிகள் மக்களைத் தவறாக வழிநடத்தி வருகிறார்கள்.
மயக்கப்பட்ட மக்கள்:
தேவனுடைய ஜனங்கள், பாம்பு ஆதாமையும் ஏவாளையும் பாவத்தில் விழச் செய்ததுபோல், கள்ளத்தீர்க்கதரிசிகளால் மயக்கப்படுகிறார்கள். இனிமையான வார்த்தைகளால் சந்தேகங்களை விதைத்து, அருவருப்பான பொய்யான வாக்குறுதிகளை வழங்குகிறார்கள். எவ்வாறு ஈர்ப்பு விசை அனைத்தையும் பூமிக்குத் தாழ்த்துகிறதோ, அதுபோல் கள்ளப்போதகர்கள் மக்களை அழிவுக்குத் தள்ளுகிறார்கள். சோதித்தறியும் புத்தி இல்லாதவர்கள் துயரமாக நாசமடைவார்கள். யோவான் விசுவாசிகளுக்கு, “ஒவ்வொரு ஆவியையும் சோதித்தறியுங்கள்” என்று அறிவுறுத்துகிறார் (1 யோவான் 4:1)
மிகக் குறைந்த தரப்பொருட்கள்:
அவர்கள் வெளிப்புறத்தில் அழகாகத் தோன்றும் சுவர்களைக் கட்டுகிறார்கள்; ஆனால் அவற்றில் உண்மையான வலிமை இல்லை. அந்தச் சுவர்கள் குறைந்த தரமான பொருட்களால் அல்லது மாற்றுப் பொருட்களால், பலவீனமான பொருட்களால் கட்டப்படுகின்றன. வருத்தம் என்னவென்றால், அவர்கள் “சரியாக கலக்கப்படாத மண்ணுருண்டு” (Untampered mortar) என்பதைப் பயன்படுத்துகிறார்கள்; அதாவது, பொருட்களின் அளவிலும் கலவையிலும் சரியான சமநிலை இல்லாததால், அது எளிதில் முறிந்து சிதைந்து விடுகிறது. சில அறிஞர்கள், அந்த “Untampered mortar” என்பது வெறுமனே வெள்ளையடிப்பது (whitewash) மட்டுமே என்கிறார்கள்; அது சுவரை உறுதியாக்காது. வெளிப்படையாக அது நிலைத்தன்மையுடனும் உடைக்கமுடியாததுபோலும் தோன்றினாலும், அவை வெறும் மாயை மட்டுமே.
இயற்கை பேரழிவு:
அந்தச் சுவர்கள் சோதிக்கப்பட்டவையுமல்ல, பரிசோதிக்கப்பட்டவையுமல்ல. தேவன் அறிவித்த செய்தி என்னவென்றால்; கள்ளத்தீர்க்கதரிசிகள் கட்டிய அந்த பலவீனமான சுவர்களுக்கு எதிராகப் புயல் எழும்; தேவனுடைய ஜனங்கள் அவற்றில் மூட நம்பிக்கையுடன் நம்பியிருந்தார்கள். வெள்ளமும், கல்மழையும், புயல்களும் வரும்; அவற்றினுள் தஞ்சம் புக முயல்வோர் துயரகரமாக அழிந்து போவார்கள்.
நான் கள்ளத்தீர்க்கதரிசிகளையும், கள்ளப்போதகர்களையும், அவர்களுடைய போலியான செய்திகளையும் அறிவார்ந்த முறையில் பிரித்தறிகிறேனா?
Rev. Dr. J.N. Manokaran