கழுதை பரலோகம் செல்லுமா

செல்வந்தர்களில் சிலர் தங்கள் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளுக்காக தங்கள் முழு செல்வத்தையும் எழுதித் தரும் வகையில் உயில்களை எழுதுகிறார்கள் என்ற பல அறிக்கைகள் உள்ளன.
ஒரு நபர் தனது நாய்க்காக இருபத்தி நான்கு மணி நேரமும் குளிரூட்டப்பட்ட ஒரு நினைவிடக் கல்லறையை அமைத்துள்ளார். சில கிறிஸ்தவர்கள் தங்கள் செல்லப்பிராணிகளுக்காக போதகர்களை வேத வாசிப்பும், ஜெபங்களும், பாடல்களும் அடங்கிய இறுதி சடங்குகளை நடத்த வேண்டும் என்றும் வற்புறுத்துகிறார்கள்.

சிருஷ்டிப்பு:
மோசே எழுதிய படைப்பின் விவரம் ஆழ்ந்த பொருளும் போதனையுமுடையதாகும். தேவன் முழு பிரபஞ்சத்தையும் அதன் அனைத்து கூறுகளையும் படைத்த பிறகு, ஆதாமையும் ஏவாளையும் ஏதேன் தோட்டத்தில் வைப்பதற்கு படைத்தார் (ஆதியாகமம் 1). தேவன் ஆதாமை விசேஷமாக படைத்தார். பிற மனிதரல்லாத அல்லது தாழ்ந்த உயிரினங்களை தேவன் தனது வார்த்தையினால் படைத்தார்; ஆனால் மனிதனை மண்ணிலிருந்து படைத்து, தமது சாயலிலும் ரூபத்திலும் உருவாக்கி, அவன் நாசியில் உயிர்மூச்சை ஊதினார் (ஆதியாகமம் 2:7). ஆகையால், மனிதன் தேவனுடைய படைப்பில் சிறந்த கீரிடம் உள்ளவன் ஆனான் (சங்கீதம் 8:5).

கழுதைகள்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்குள் பவனியாக ஒரு கழுதையின் மீது சவாரி செய்தார். அதனால் அந்தக் கழுதை புனிதமானதாகவோ அல்லது விசேஷமானதாகவோ ஆகாது. நற்செய்திகளில் அந்தக் கழுதையைக் குறித்து மேலும் எந்தச் சிறப்பும் கூறப்படவில்லை. சில மதங்கள் தங்களுடைய தெய்வங்கள் சவாரி செய்த மிருகங்களைத் தெய்வீகமானவை என்று போதிக்கின்றன. ஆனால் தேவன் பிலேயாமை அவன் தேர்ந்தெடுத்த அழிவின் வழியிலிருந்து எச்சரிக்க, ஒரு கழுதைக்கு பேசும் திறனை அளித்தார் (எண்ணாகமம் 22:28). அந்தக் கழுதை கடவுளாக மதிக்கப்பட்டதாக வேதத்தில் எங்கும் சாட்சியமில்லை.

மீன்:
யோனாவுக்கு கீழ்ப்படிதல், தேவனுடைய பணி, மேலும் தேவனுடைய இறையாண்மையையும் அதிகாரமும் பற்றிய பாடங்களை கற்பிக்க, தேவன் ஒரு பெரிய மீனைப் பயன்படுத்தினார். அந்த மீன் கடவுளும் அல்ல, ஆராதிக்கத்தக்கதுமல்ல.

காகங்கள்:
தேவன் எலியாவுக்கு உணவளிக்க காகங்களுக்கு ஆணையிட்டார் (1 இராஜாக்கள் 17:1–7). அதற்காக எலியா காகங்களை வணங்கவில்லை; அவை தேவனால் நியமிக்கப்பட்ட உணவளிக்கும் கருவிகள் என்று அவர் புரிந்திருந்தார்.

வீட்டிலே வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள்:
மனித வரலாற்றில் பசுக்கள், ஆடுகள், ஒட்டகங்கள் போன்ற பல மிருகங்கள் வீட்டில் வளர்க்கப்பட்டுள்ளன. பல கலாச்சாரங்களில் செல்லப்பிராணிகளும் இருந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன. ஆனால் அவற்றைத் தெய்வங்களாகக் கருதுவது அல்லது அவற்றிற்காக நினைவுச்சின்னங்களை அமைப்பது போன்றவை வேதத்தில் எங்கும் காணப்படவில்லை.

எச்சரிக்கை:
பவுல், தேவனுக்குச் சார்ந்த மகிமையை எந்த மிருகத்திற்கும் அளிக்கக் கூடாது என்று எச்சரிக்கிறார் (ரோமர் 1:23)

நான் தேவனுக்கு மட்டுமே மகிமை செலுத்துகிறேனா? 
 

Rev. Dr. J.N. Manokaran