1. விரோதமாய் எழும்பும் சத்துரு உபாகமம் 28:7 உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிபோவார்கள் உபாகமம் 33:11 லேவியைக் குறித்து: அவனைப் பகைத்து அவனுக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் திரும்ப எழுந்திராதபடி அவர்களுடைய இடுப்புகளை நொறுக்கிவிடும் என்றான். 2சாமுவேல் 22:49 எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை உயர்த்திக் கொடுமையான மனுஷனுக்குத் தப்புவிக்கிறீர். சங்கீதம் 18:48;3:1;17:7;44:5; 59:1;92:11
2. விரோதமாய் எழும்பும் ஆயுதம் ஏசாயா 54:17 உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோகும். எரேமியா 20:11 கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள்- (பஸ்கூர்)
3. விரோதமாய் எழும்பும் நாவு ஏசாயா 54:17 உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய். சங்கீதம் 5:9 (1-12); ரோமர் 3:13 (10-18) அவர்கள் வாயில் உண்மை இல்லை, அவர்கள் உள்ளம் கேடுபாடுள்ளது; அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி; தங்கள் வாயினால் இச்சகம் பேசுகிறார்கள். யாக்கோபு 3:6 (1-18) நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயங்களில் நாவானது முழுசரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது... நாவை அடக்க ஒரு மனுஷாலும் கூடாது; அது சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது.